தோல்வி படத்தின் இரண்டாம் பாகத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கும் தயாரிப்பாளர்.. நல்ல படம்தான் ஆனால் ஓடல!

வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் தோல்வி படத்தின் இரண்டாம் பாகத்தை மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்க போவதாக ஒரு தயாரிப்பாளர் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சிவி குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாயவன். அறிவியல் சார்ந்த கதையில் உருவாகியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

ஆனால் வசூல் ரீதியாக இந்த படம் ஒரு தோல்விப்படம். இருந்தாலும் இந்த படத்தின் முடிவு இரண்டாம் பாகத்தின் தொடர்கதை போல அமைந்திருக்கும். இதன் காரணமாகவே மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தை மாயவன் ரீ லோடட் என்ற பெயரில் எடுக்கவுள்ளார் சிவி குமார்.

தற்போது ஓடிடி காலம் என்பதால் கண்டிப்பாக ஓடிடியில் மாயவன் படத்தின் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெறும் எனவும், முழுக்க முழுக்க ஓடிடியை நம்பியே இந்த படம் எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாயவன் படத்தில் சந்தீப் கிஷன் ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்திருந்தார். மேலும் ஜாக்கி ஷராப், டேனியல் பாலாஜி போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கும் அந்த படம் வரவேற்பை பெறாமல் போனது குறிப்பிடத்தக்கது.

சிவி குமார் தயாரிப்பாளராக பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இயக்குனராக மாயவன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கொற்றவை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

maayavan-reloaded
maayavan-reloaded
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்