மாநாடு அரசியல் படமா? இதான் கதை.. லீக் செய்த கருப்பு ஆட்டை தேடும் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான ஈஸ்வரன் படம் தோல்வியடைந்ததால், மாநாடு படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இவர்கள் தவிர எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி உள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து வரும் தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் கதை குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது இப்படம் டைம் லூப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். டைம் லூப் என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சிக்கி மீண்டும் மீண்டும் அதையே வாழ்வதாகும். இதுவரை அரசியல் கலந்த ஆக்ஷன் படம் என்று கூறிவந்த நிலையில், தற்போது மாநாடு படம் சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. மொத்தமா கதை கருவை லீக் செய்த கருப்பு ஆட்டை வெங்கட் பிரபு தேடி வருகிறாராம்.

maanadu motion poster

படம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை திரையரங்கில் ஓடினால் போதும் என்பதே ரசிகர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது. ஏனெனில் சமீபகாலமாக சிம்பு நடிப்பில் வெளியான எந்தவொரு படமும் வெற்றி பெறவில்லை. இதனால் சரிந்து கிடக்கும் அவரது மார்க்கெட் மாநாடு படத்தின் வெற்றி மூலமாக மட்டுமே மீட்க முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். படம் வெளியானால் மட்டுமே சிம்புவின் நிலைமை தெரியவரும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்