அண்ணத்தா படத்துடன் மாநாடு மோதுவதற்கு முக்கிய காரணம் இது தான்.. மாஸ்டர் பிளானா இருக்கே.!

தர்பார் படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் தவிர நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படம் இந்தாண்டு தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து விட்டனர்.

இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படமும் அதே நாளில் வெளியாகும் என சமீபத்தில் அறிவித்து கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ரஜினியுடன் சிம்பு மோதுகிறாரா என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அண்ணாத்த படத்துடன் மாநாடு படம் மோதுவதற்கான காரணம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது கொரோனா இரண்டாம் அலை காரணமாக தற்போது திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கி வருகிறது. எப்படியும் தீபாவளிக்கு முன்பு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிவிடுவார்கள் அல்லது அண்ணாத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் திமுகவிற்கு நெருக்கம் என்பதால் எப்படியும் அந்த அனுமதி கிடைக்கும் என தெரிந்து தான் மாநாடு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

ஒருவேளை 50 சதவீத இருக்கை தொடர்ந்தால் அண்ணாத்த பட வெளியீடு தள்ளிப் போகவும் வாய்ப்புண்டு. அந்த சமயத்தில் போட்டிக்கு வேறு எந்தப் படமும் இல்லாத நிலையில் மாநாடு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கலாம் என மாநாடு படக்குழுவினர் கணக்கு போட்டு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

maanaadu
maanaadu

இதற்கிடையில் அஜித் மற்றும் வினோத் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியானது. ஏற்கனவே அண்ணாத்தா மற்றும் மாநாடு படங்கள் வெளியாக உள்ளதால் தற்போது வலிமை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வலிமை படத்தை தீபாவளிக்கு முன்பு அல்லது பின்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்