சொன்னதை செய்து காட்டிய சிம்பு.. ஆனந்தக் கண்ணீர் விட்ட தயாரிப்பாளர்

சிம்பு என்றாலே வம்பு என்ற காலம் போய் சிம்பு என்றாலே தயாரிப்பாளர்களுக்கு தெம்பு என்ற காலம் வந்துவிட்டது போல. சிம்புவை வைத்து படம் எடுக்க கோலிவுட்டில் அத்தனை தயாரிப்பாளர்களும் வெயிட்டிங்.

அதற்கு காரணம் சமீபத்தில் சிம்பு நடித்துக்கொண்டிருந்த படத்தில் தயாரிப்பாளர்களுக்கு சொன்னதை இம்மி பிசகாமல் செய்து கொடுத்தது தான். அப்படி என்ன சாதனை செய்து விட்டார் என்றுதானே கேட்கிறீர்கள்.

சிம்பு ஒரு படத்தை குறிப்பிட்ட தேதியில் நடித்து முடித்துக் கொடுத்தாலே அது சாதனை தானே. கோலிவுட் வட்டாரங்களில் சிம்புவின் முந்தைய காலங்களைப் பற்றி கேளுங்கள். கண்ணீர் மல்க கதை கதையாக கூறுவார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் சிம்பு அப்படி இல்லை. கடந்த பொங்கலுக்கு ஒரே மாதத்தில் ஈஸ்வரன் எனும் படத்தை முடித்து ரிலீஸ் செய்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மாநாடு படப்பிடிப்பையும் முடித்து கொடுத்துவிட்டார்.

முன்னதாக ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளுடன் தொடங்கிய படம்தான் மாநாடு. முதலில் நடிக்க ஒத்துக் கொண்ட சிம்பு பின்னர் மாநாடு படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வந்தன. இதை தயாரிப்பாளரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

அதன்பிறகு அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டிய சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் கேட்ட நேரங்களில் தவறாமல் வந்து படப்பிடிப்பை மொத்தமாக முடித்துக் கொடுத்துவிட்டாராம். இதுதான் இன்றைய கோலிவுட் சினிமாவின் ஹாட் டாபிக்காக உள்ளது.

maanadu-cinemapettai
maanadu-cinemapettai

சிம்பு இப்படி எல்லாம் மாறுவார் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை என கோலிவுட் வட்டாரங்களே தற்போது சிம்புவின் புகழ் பாடிக் கொண்டிருக்கிறது. இது குறித்து தன்னுடைய வட்டாரங்களில் சுரேஷ் காமாட்சி ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் மாநாடு படம் முன்னதாக ரம்ஜான் வெளியீட்டை உறுதி செய்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -