சூர்யா கூட்டணியில் மீண்டும் பருத்தி வீரனாக கார்த்தி.. வைரலாகும் டைட்டில் போஸ்டர்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் தோல்வியை தழுவியதால் எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் நடிகர் கார்த்தி இறங்கியுள்ளார். அதன் முடிவாக தற்போது தனது வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். அந்த இயக்குனர் வேறு யாருமல்ல. ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கொம்பன் படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா தான்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி படத்தை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார்த்தி சர்தார் படத்தில் இணைய உள்ளார்.

சர்தார் படத்தை முடித்த பின்னரே முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தை கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா அவரது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலமாக தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்போது விருமன் என பெயர் வைத்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

karthi-suriya-viruman
karthi-suriya-viruman

தற்போது இப்படத்திற்கான தலைப்பு அதிகாரப்பூர்வ போஸ்டருடன் வெளியாகியுள்ளது. படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, ஆகியோர் முக்கி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கொம்பன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள விருமன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்