ஜெயம்ரவியின் எம் குமரன் s/o மகாலட்சுமி படத்தை கைநழுவ விட்ட பிரபல நடிகர்! சூப்பர் ஹிட் படமாச்சே!

2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அசின் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம்தான் எம் குமரன் S/O மகாலட்சுமி. தெலுங்கு ரீமேக் ஆக இருந்தாலும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ஜெயம் ரவிக்கு ஒரு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் செம ஹிட். படத்தில் பிரகாஷ்ராஜ் வேடமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. ஒட்டுமொத்த தமிழ்நாடே இந்த படத்தை கொண்டாடியது என்று சொன்னால் மிகையாகாது.

அதற்கு காரணம் அந்தப் படத்தில் அம்மாவாக நடித்த நதியாவின் கதாபாத்திரம் தான்.எனவே எம் குமரன் S/O மகாலட்சுமி படத்திற்கான ஆடிஷன் நடைபெற்றபோது, அதில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.

தொடக்கத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய் சேதுபதிக்கு,  திரைப்படத்தில் மட்டும் எம் குமரன் S/O மகாலட்சுமி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால், அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே சொல்லியிருக்கலாம்.

vijay-sethupathy-cinemapettai
vijay-sethupathy-cinemapettai

ஆனால் அந்த வாய்ப்பு விஜய் சேதுபதியை விட்டு கை கழுவி சென்றது. இருப்பினும், அதன்பிறகு ஆறு வருடம் கழித்து 2010ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் கதாநாயகனாக விஜய் சேதுபதி அறிமுகமானார்.

அதுமட்டுமில்லாமல் அதன்பின்பு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை விஜய் சேதுபதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தொடர்ந்து வரிசையாக படங்களை ரவுண்ட் கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்