கேஜிஎப் தோரணையில் படம் எடுத்தும் நம்பி மோசம் போன லைக்கா.. அதல பாதாளத்தில் தலையை விட்ட பரிதாபம்

கோலிவுட்டில் டாப் ஹீரோக்களின் படங்களை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம், சமீப காலமாகவே நல்ல லாபத்தில் போய்க் கொண்டிருந்தது. ஆனால் யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல, கடைசியாக 4 கோடிகள் கொடுத்து ஒரு படத்தின் டிஸ்ட்ரிபியூஷன் வாங்கி அதல பாதாளத்துக்கு சென்றது.

சமீபத்தில் பயங்கர மாஸாக ஒரு படம் வெளிவந்தது. வந்த வேகத்தில் தூசியாக போனது. பெரும் பொருட்செலவில் உருவான இந்த படம் ரிலீஸ் ஆன பின் போஸ்டர் ஒட்டிய காசு கூட வசூலிக்கவில்லை. சமீபத்தில் லைக்காவால் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்ட படம் கப்சா.

Also Read: லைக்காவுக்கு போட்டியாக இறங்கிய ஐசரி கணேஷ்.. வரிசை கட்டி நிற்கும் 7 முக்கிய படங்கள்

சும்மா கேஜிஎப் தோரணையில் அதிரவிட்ட இந்த படம் 10 லட்சம் கூட வசூலிக்க வில்லையாம். பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதிரடி ஆக்சன் படமாக வெளியான இந்த படத்திற்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்தது. அதன்பின் இந்த வருடம் கேஜிஎப் பாணியில் மற்றொரு கன்னட படமான கப்சா வெளியாகி லைக்கா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தயாரிப்பு நிறுவனங்களை ஓட விடும் லைக்கா.. 1000 கோடி பட்ஜெட்டுக்கு மேல் கைவசம் இருக்கும் 6 பிரம்மாண்ட படங்கள்

மார்ச் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த  படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை ஸ்ரேயா  இணைந்து நடித்தனர். பான் இந்தியா படமாக வெளியான இந்த படம் பில்டப் காட்டிய அளவுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை. ஓவர் வைலன்ஸ் உடம்புக்கு ஆகாது என அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்டுகள் ரசிகர்களிடமிருந்து தாறுமாறாக குவிந்தது.

இப்படி எல்லா ஸ்டேட்டிலும் அடி மேல அடி வாங்கிய லைக்காவுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. கன்னட படங்கள் ஆன கேஜிஎப், காந்தாரா போன்ற படங்களின் மூலம் கன்னட படங்களுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் கப்சா அதை தலைகீழாக திருப்பி போட்டது. இதில் பலி கிடாய் ஆக லைக்கா மாட்டியது தான் அவலம்.

Also Read: அஜித் படத்தின் சீக்ரெட் கசிந்து விடும் என்பதால் கட்டளை போட்ட லைக்கா.. ஏகே 62 படத்திற்கு போட்ட பூஜை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்