பிரச்சனை தீர்ந்தாலும் முரண்டு பிடிக்கும் சங்கர்.. சங்கடத்தில் இருக்கும் லைகா

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். ஆனால் சமீப காலமாக அவரை பல பிரச்சினைகள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது கமல்ஹாசனை வைத்து பல வருடங்களுக்கு முன்பே அவர் ஆரம்பித்த இந்தியன் 2 திரைப்படம் தான்.

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996ல் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன். கமலின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. அதன் பிறகு இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

ஆனால் பல பிரச்சினைகளால் நின்று போன இந்தத் திரைப்படம் ஒரு வழியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, தயாரிப்பாளர் உடன் கமல் மற்றும் சங்கருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்று இந்த படத்தின் பிரச்சனைகள் நீண்டு கொண்டே சென்றது.

இப்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து இந்த பிரச்சனைகளை எல்லாம் சுமூகமாக பேசி தீர்த்து விட்டனர். அதனால் மீண்டும் படப்பிடிப்பு வேலைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

ஆனால் இதில் தான் தற்போது ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்த திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படமும் ஆரம்பிக்கப்பட இருப்பதால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் சங்கர் இருக்கிறாராம். அதனால் இந்த படத்திற்கு முழுமையாக என்னால் ஒத்துழைப்பு தர முடியாது. சிறிது நாட்கள் இங்கேயும், சிறிது நாட்கள் அங்கேயும் என்று தான் என்னால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

பிரச்சனைகள் எல்லாம் ஒரு வழியாக தீர்ந்து படத்தை ஆரம்பிக்கலாம் என்றால் சங்கர் இப்படி முரண்டு பிடிக்கிறாரே என்று தயாரிப்பாளர் மிகுந்த கவலையில் இருக்கிறாராம். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இந்தியன் 2 திரைப்படம் இன்னும் எவ்வளவு காலதாமதம் ஆகுமோ தெரியவில்லை.

- Advertisement -