மணிரத்னத்தை மழைபோல் நம்பும் லைக்கா.. லண்டனில் பிரம்மாண்ட ஏற்பாடு!

இரண்டு பாகங்களாக உருவாகும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பலரும் எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட செட்டுகளை அமைத்த முடிவடைந்துள்ளது.

எனவே லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட திரை பட்டாளமே நடித்துள்ளது.

படப்பிடிப்பை முடித்து டப்பிங் வேலையை துவங்கியுள்ள பொன்னியின் செல்வன் படமானது, தமிழ் புத்தாண்டு தினம் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்து கோலாகலமாக கொண்டாட லைக்கா நிறுவனம் லைக்கா முடிவெடுத்துள்ளது.

எனவே சென்னையில் பிரமாண்ட ஏற்பாடு உடன் இசை வெளியீட்டு விழாவை நடத்தும் லைக்கா புரொடக்ஷன்ஸ், அதேபோன்று லண்டனிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கான மற்றொரு இசை வெளியீட்டு விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு படத்தை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தின் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே தூண்டும் வகையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் பல்வேறு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் தற்போது இசை வெளியீட்டு விழாவையும் சிறப்பாக நடத்தி பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடையே எகிறவிட பக்கா பிளான் போட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்