அஜித் படத்தின் சீக்ரெட் கசிந்து விடும் என்பதால் கட்டளை போட்ட லைக்கா.. ஏகே 62 படத்திற்கு போட்ட பூஜை

அஜித்தின் துணிவு படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் ஏகே 62 படத்தை பற்றிய, எதிர்பார்ப்பானது ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் எகிர விட லைக்கா நிறுவனம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. 

விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகி உள்ளதை அடுத்து, அஜித் நடிக்கும் படத்திற்கு 99 சதவீதம் லைக்கா புரொடக்ஷன் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் ஏகே 62 முடிவாகிவிட்டது. மேலும் படத்திற்கான பூஜை சைலன்டாக போடப்பட்ட நிலையில் அடுத்ததாக படப்பிடிப்பிற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்க உள்ளனர்.

Also Read: ஏகே 62 வாய்ப்புக்காக போட்டி போடும் நடிகைகள்.. தீயாய் வேலை செய்யும் வாரிசு நடிகை

ஆனால் அஜித் படத்தைப் பற்றிய சீக்ரட்டுகள் கசிந்து விடாமல் இருப்பதற்காக லைக்கா இந்தப் படத்திற்கு என்று தனி அலுவலகம் தான் போட வேண்டும் என்று கட்டளை போட்டு உள்ளது. அதன்படி ரகசியமாக அலுவலகத்தை அமைத்து ஏகே 62 படத்திற்கான வேலைகளை இயக்குனர் மகிழ் திருமேனி செய்து வருகிறார்.

ஏற்கனவே லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் அலுவலகம் டி-நகரில் இயங்கி வருகிறது. அதிலும் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து படங்களுக்கு மேல் தனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர். ஆனால் இந்தப் படத்திற்காக டி நகரில் உள்ள அலுவலகத்தை ஒதுக்காமல் தனியாக அலுவலகத்தை அமைத்துள்ளனர்.

Also Read: பிரம்மாண்ட பட்ஜெட், தாறுமாறான சம்பளம்.. AK 62 மூலம் மிரட்டவரும் அஜித்

இதனை தொடர்ந்து ஏகே 62 படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் நீராவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக  கூறப்படுகிறது. தற்பொழுது படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்களின் கேரக்டர்கள் வெளியில் லீக் ஆகாமல் பாதுகாத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அஜித் சம்பந்தப்பட்ட சுவாரசியமான காட்சிகள் வெளியில் கசிந்து விடாமல் இருப்பதற்கு ரகசியமாக வேலை செய்து வருகின்றனர். அதிலும் தனி அலுவலகம் அமைத்து ஏகே 62 பணியாற்றி வருவது மேலும் அஜித் ரசிகர்கள் மத்தியில் படத்தினை பற்றிய எதிர்பார்ப்பை  கிளப்பியுள்ளது.

Also Read: அஜித்தால் மட்டுமே இழுத்தடிக்கும் AK-62.. லியோவுக்கு போட்டினா சும்மா விட்ருவோமா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்