திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

கமலால் வேகுற அடுப்புல வெண்ணிறாய் கொதிக்கும் லைகா.. வழியே இல்லாமல் ஆண்டவர் போட்ட கட்டளை

லைகாவுடன் கமல் இப்பொழுது சிறிது மனக்கசப்பில் இருந்து வருகிறார். சங்கர், கமல், லைகா கூட்டணியில் உருவான படம் இந்தியன் 2. இந்த படம் லைகா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனை நம்பி இந்தியன் 3 படத்தை வேறு எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இப்பொழுது இந்தியன் 2 படத்தால் 3ஆம் பாகத்துக்கு பெரும் இடையூறு வந்துவிட்டது. பிசினஸ் இல்லை, வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை, இந்த படத்தை பெரும் பொருட் செலவில் எடுத்து லைகா அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நஷ்டத்தை எப்படி ஈடுகெட்ட போகிறோம் என தவித்து வருகிறார்கள்.

3 பெரிய படங்களை ஒருசேர கமிட் செய்து கொண்டு திணறி வருகையில் வேட்டையன் படத்தால் கொஞ்சம் லாபம் பார்த்துள்ளது லைக்கா நிறுவனம். இருந்தாலும் அவர்கள் நஷ்டத்தில் இருந்து இன்னும் மேலே வரவில்லை. இப்பொழுது கமல் லைகாவிடம் இந்தியன் 3 திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என கூறிவிட்டாராம்.

ஏற்கனவே இந்த படத்தை வாங்குவதற்கு யாரும் இல்லாத நிலையில். இந்த படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என லைகா நிறுவனம் யோசிக்கையில் கமல் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். கமல் இந்தியன் 2 படத்தால் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

கமல் மனதில் இப்பொழுது விக்ரம் போல் ஒரு சக்ஸஸ்ஃபுல்லான படத்தை கொடுத்த பிறகு தான் இந்தியன் மூன்றாம் பாகத்தை வெளியிட வேண்டும் என்ற ஒரு திட்டம் இருக்கிறது. இதனால் இப்பொழுது இந்த படத்தின் ரிலீசுக்கு தடையாக நிற்கிறார். இதனால் லைக்கா எரிய நெருப்பில் என்னையாய் காய்ந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News