கடனை கொடுக்காமல் வாய்ச்சவடால் விடும் விஷால்.. கொந்தளித்து போய் லைக்கா எடுத்த அஸ்திரம்

விஷால் என்றாலே பிரச்சினை தான் என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட சர்ச்சைகளில் அவர் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் லைக்காவுடன் அவருக்கு இருக்கும் பிரச்சனை இன்னும் ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை. அதனாலேயே இருதரப்பும் தற்போது சமாதானத்திற்கு இடமே இல்லை என்ற ரீதியில் கொந்தளித்து போய் இருக்கிறது.

அதாவது லைக்கா நிறுவனத்திற்கு தரவேண்டிய கடன் தொகையை விஷால் கொடுக்காததால் அந்தப் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது அனைவருக்கும் தெரியும். ஆனால் சொன்னபடி விஷால் இன்னும் பணத்தை தராததால் தற்போது இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

Also read: டேமேஜ் ஆன பேரை காப்பாற்றி கொள்ள விஷால் போடும் திட்டம்.. சப்போர்டுக்காக விஜயகாந்தை வைத்து போடும் பிளான்

அந்த விசாரணையில் பணத்தை கொடுக்கும் வரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் உருவாகும் படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடி என எதிலும் வெளியாக கூடாது என்ற தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த விவகாரம் தான் தற்போது திரையுலகில் விவாதமாக மாறி இருக்கிறது. ஏனென்றால் விஷாலுக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் இருக்கிறது.

அப்படி இருந்தும் கூட எதற்காக கடனை திருப்பிக் கொடுக்காமல் அவர் இழுத்தடிக்கிறார் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. விசாரித்ததில் இது அவருடைய ஈகோவை தூண்டிவிட்ட விவகாரமாகவே மாறி இருக்கிறது. லைக்கா நிறுவனம் இந்த பிரச்சனையை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதால் கடுப்பான விஷால் இனி சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, கோர்ட் மூலமாகவே பணத்தை வாங்கிக் கொள்ளட்டும் என்று வாய்ச்சவடால் பேசி வருகிறாராம்.

Also read: விஷாலை நம்பி வாங்கிய பெரிய ஆப்பு.. பாட்ஷா பாய் போல் சுந்தர் சி திருப்பி கொடுத்த தரமான அடி

அது மட்டுமல்லாமல் தான் படத்தை தயாரித்தால் சிக்கலாகும் என்பதால் தான் அவர் நண்பர்களை வைத்து மறைமுகமாக படத்தை தயாரித்து வெளியிடுகிறார் என்ற ஒரு பேச்சும் இப்போது கிளம்பியுள்ளது. இது ஒரு புறம் இருக்க விஷாலை தன் வழிக்கு கொண்டு வர லைக்காவும் ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாம்.

அதாவது விஷாலை வைத்து படம் இயக்கப் போகும் டைரக்டர்களை எல்லாம் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் லைக்கா இறங்கியுள்ளதாம். இப்படி இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டியை தான் திரையுலகம் ஆர்வத்துடன் கவனித்து வருகிறது. மேலும் யாராவது ஒருத்தர் இறங்கி வந்தாலே இந்த பிரச்சனை முடிந்து விடும் எனவும் சிலர் ஆலோசனை கூறி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் விஷால் இந்த விவகாரத்தை அவ்வளவு லேசில் விட மாட்டார் என்பது மட்டும் உறுதி.

Also read: எண்டு கார்டே இல்லாத பொன்னியின் செல்வன்.. மணிரத்தினம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் லைக்கா

Next Story

- Advertisement -