20வது நாளில் லவ் டுடே செய்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை.. ஏஜிஎஸ் நிறுவனத்தை மீண்டும் தலை நிமிர்த்தி விட்ட பிரதீப்

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் முதன் முறையாக நடிகராக களம் இறங்கி தானே எழுதி இயக்கிய திரைப்படம் தான் லவ் டுடே நவம்பர் 3ஆம் தேதி ரிலீசான இத்திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது மேலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இத்திரைப்படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கி திரையரங்குகளுக்கு விற்பனை செய்தது.

இதனிடையே லவ்டுடே திரைப்பட திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே இருபத்தி ஒரு கோடியை அள்ளியது இரண்டாம் வாரத்தில் அது அப்படியே இரட்டிப்பாக தற்போது 55 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே லவ்டுடே திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. இன்னும் இத்திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் இத்திரைப்படத்தின் தமிழக வசூல் கட்டாயம் 70 கோடியை தாண்டும் என கூறப்பட்டு வருகிறது.

Also Read : கோமாளி படத்தின் முதல் சாய்ஸ் ஜெயம் ரவி இல்ல.. வெற்றிக்குப்பின் பிரதீப் வெளியிட்ட ரகசியம்

மேலும் லவ்டுடே திரைப்படத்தின் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்துள்ளனர்.படத்தை வரும் நவம்பர் 25 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். இத்திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை நடிகர் விஜய் தேவர் கொண்டா ரிலீஸ் செய்த நிலையில் ஆந்திராவில் மட்டும் 45க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் லவ்டுடே திரைப்படத்தின் வெளிநாட்டு ஓவர்சீஸ் உரிமையை ராதாகிருஷ்ணன் என்ற டைமண்ட் வாங்கிக் உள்ள நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திரையரங்கு பட்டியல் வெளியானது. படம் ரிலீசாகி 20 நாட்களே ஆன நிலையில் இவ்வளவு சாதனையை லவ் டுடே திரைப்படம் செய்துள்ளது தான் ஆச்சரியமாக உள்ளது.

Also Read : வசூலில் சிம்பு, சிவகார்த்திகேயனை தூக்கி சாப்பிட்ட லவ் டுடே பிரதீப்.. அடுத்த டார்கெட் லோகேஷன் கைதியாம்

இப்பொழுது இருக்கும் காலத்திற்கு ஏற்றார் போல காதலர்கள் எப்படி அவர்களை புரிந்து வைத்துள்ளார்கள் கையிலுள்ள அலைபேசியால் உறவில் ஏற்படும் பிரச்சனைகள் எவ்வளவு உள்ளது என்பதை நகைச்சுவையுடனும் சென்டிமென்ட் காட்சிகளும் காதலுடனும் பிரதீப் ரங்கனதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை குடும்பம் மற்றும் இளைஞர்கள் வரை அனைவரும் பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதால் இத்திரைப்படத்தை பிரபல போட்டி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. இதனிடையே இத்திரைப்படம் ரிலீசாகி சில வாரங்களில் 100 கோடி வரை அசால்ட்டாக சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : புகழ் போதையில் நன்றி மறந்து சிவகார்த்திகேயன்.. தம்பி பிரதீப் பார்த்து கத்துக்கோங்க ப்ரோ!