வசூலில் சிம்பு, சிவகார்த்திகேயனை தூக்கி சாப்பிட்ட லவ் டுடே பிரதீப்.. அடுத்த டார்கெட் லோகேஷன் கைதியாம்

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் வந்து வெற்றி பெறுவது இயல்பு ஆனால் புதிய கதாநாயகன் சிறிய பட்ஜெட் போன்ற படங்கள் வெற்றி பெறுவது அரிது அந்த வரிசையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ரங்கநாதன் இயக்கி, நடித்த லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. படம் ரிலீசான முதல் நாளே ரசிகர்களிடம் பேராதரவை பெற்ற நிலையில் இப்படத்தின் சாதனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம், படம் ரிலீசாகி மூன்று வாரங்களில் 50 கோடி ரூபாய் வரை வசூல் படைத்துள்ளது. மேலும் இந்த 2022 வருடத்தில் தமிழ் சினிமாவில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் லவ் டுடே திரைப்படமும் இடம்பெற்று சாதனை படைத்து வருகிறது.

Also Read : 6 பெரும் முதலைகளை ஓரங்கட்டிய பிரதீப் ரங்கநாதன்.. முதல் பந்திலேயே அடித்த இமாலய சிக்சர்

படம் ரிலீசாகி மூன்று வாரங்களே ஆன நிலையில் மற்ற முன்னணி நடிகர்களான திரைப்படங்கள் மூன்று வாரங்களில் செய்யாத சாதனையை லவ் டுடே திரைப்படம் செய்துள்ளது. இதில் முக்கியமாக நடிகர் சிம்புவின் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் மூன்று வாரங்களில் 40 கோடி வரை மட்டுமே வசூலை பிடித்த நிலையில், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் 50 கோடி வரை வசூலித்துள்ளது

தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் மூன்று வார கால வசூல் சாதனையையும் லவ் டுடே படம் முறியடித்து வருகிறது. இன்னும் திரையரங்கில் லவ் டுடே திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தருவாயில், நடிகர் தனுஷின் நடிப்பில் இந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் 70கோடி ரூபாய் வசூலையும் முறியடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : புகழ் போதையில் நன்றி மறந்து சிவகார்த்திகேயன்.. தம்பி பிரதீப் பார்த்து கத்துக்கோங்க ப்ரோ!

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 உள்ளிட்ட படங்கள் ரிலீசான 4 வாரங்களில் 70 கோடி வசூலை படைத்த நிலையில் லவ் டுடே திரைப்படம் இந்த சாதனையை கூடிய விரைவில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் லவ் டுடே திரைப்படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை வாங்கியுள்ள நிலையில் 70 சதவிகிதம் திரையரங்குகளில் இத்திரைப்படம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இரண்டாவது படமே 50 கோடிக்கு வசூலை படைத்து வருவது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Also Read : காம பிசாசுகளுக்கு ரூட் போட்டுக்கொடுத்த லவ் டுடே பிரதீப்.. காட்சிகளை தூக்க வேண்டுமென வலுக்கும் எதிர்ப்பு

Next Story

- Advertisement -