கர்ணனுக்குப்பின் கவர்ச்சிக்கு மாறிய ரஜிஷா விஜயன். அதிகமாகும் சேட்டை

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரஜிஷா விஜயன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.

அந்த அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது இவருக்கு தொடர்ந்து கிராம கதைகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் ரஜிஷா விஜயன் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ரஜிஷா விஜயன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது ரசிகர்களிடம் பேசுவது மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டு பெறுவது போன்று தொடர்ந்து பல சேட்டைகளை செய்து வருகிறார்.

rajisha vijayan
rajisha vijayan

தற்போது இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் ரஜிஷா விஜயன் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பதால் தற்போது இளம் நடிகர்கள் படங்களில் நடிப்பதற்கு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கூட அவரது சமூக வலைதளப் பக்கத்தில் மார்டன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரஜிஷா விஜயன் அழகாக உள்ளார் என கூறி வருகின்றனர். மேலும் ரஜிஷா விஜயன் மார்டன் உடையில் மஜாவாக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்