லியோ படத்தில் லோகேஷ் வைத்திருக்கும் ட்விஸ்ட்.. இயக்குனர் மிஸ்கின் கொடுத்த அப்டேட்

விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தின் பரபரப்பு ஒவ்வொரு நாளும் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர், விக்ரம் படத்தின் தாக்கம் தான். அதனால்தான் இந்த படத்திற்கும் அதிக அளவில் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக லியோ படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றும் வெளிவந்த நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதை என்று யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அத்துடன் லியோ படத்தில் முக்கியமான நிறைய பிரபலங்கள் நடித்து வருவதால் இதற்கான அப்டேட்டுகள் குறித்து ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கும் இயக்குனர் மிஷ்கின் ஒரு புது அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.

Also read: லியோவை ஓரம் கட்ட வரும் ஏகே 62.. அஜித் கொடுக்க போகும் பிறந்தநாள் சர்ப்ரைஸ்

அதாவது லியோ படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியான ட்விஸ்ட் நிறைய இருக்கப் போகிறதாக கூறியிருக்கிறார். மேலும் லியோ படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாகவும் அவர்கள் எதிர்பார்த்தபடியாகவும் கண்டிப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இது சம்பந்தமாக மிஸ்கின் இடம் கேட்டபோது அதற்கு அவர் லோகேஷ் விஜய் சேர்ந்தால் அந்த படம் எப்படி இருக்கும்.

பைட் சீன்கள் தரமான சம்பவத்துடன் ரெடியாகி கொண்டிருக்கிறது என்ற தகவல்களை கொடுத்திருக்கிறார். அத்துடன் விக்ரம் படத்தில் வந்த சண்டைக் காட்சிகளை விட அதிக அளவில் இந்த படத்தில் தரமான சம்பவங்களை இறக்கப் போவதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே விஜய்க்கும் பைட் சீன்கள் நன்றாக செட்டாகும். அந்த வகையில் லியோ படம் ஒரு தரமான படமாக அமையப்போகிறது.

Also read: விஜய்யுடன் கர்ஜிக்க மட்டும் 15 கோடியா.? தலை சுற்ற வைக்கும் லோகேஷின் மாஸ்டர் பிளான்

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று விஜய் படம். அதிலும் தற்போது திரும்புகிற இடமெல்லாம் பேசப்படும் இயக்குனர் என்றால் அதில் லோகேஷ் உடைய படங்கள் தான். அந்த வகையில் லியோ படம் ஆக்சன் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்று தகவல்களை மிஸ்கின் தற்போது கொடுத்துள்ளார்.

இதற்கு பிறகு இன்னும் கூடுதலாகவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. இப்படம் வெளிவரும் நாளுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக இவர்கள் கூட்டணியில் வர இருக்கும் லியோ படம் தரமான சம்பவத்தை ஏற்படுத்தப் போகிறது.

Also read: லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த பிக்பாஸ் போட்டியாளர்.. ட்வீட் மூலம் உறுதி செய்த நடிகை

- Advertisement -