வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய்க்கு ரசிகனாலும் அஜித்துக்கு படம் பண்ணியே தீருவேன்.. வெறியோடு காத்திருக்கும் லோகேஷின் வலதுகை

Ajith-Vijay: லோகேஷ் விஜய்யின் ஆஸ்தான இயக்குனராக மாறிவிட்டார். மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து வருகின்ற வியாழக்கிழமை வெளியாகும் லியோ படத்தையும் லோகேஷ் இயக்கி இருக்கிறார். இதுவரை தமிழ் சினிமா இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்ததில்லை என்ற அளவுக்கு லியோ படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் காத்து கிடைக்கிறது.

இந்நிலையில் லோகேஷின் வலது கை கூறிய விஷயம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் குறிப்பாக அஜித்தின் ரசிகர்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறார்கள். அதாவது லோகேஷின் படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரத்னகுமார். இவர் மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் மேயாத மான், ஆடை மற்றும் குளுகுளு ஆகிய படங்களை ரத்தினகுமார் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது சினிமாவுக்கு வரும்போது தனக்கு அஜித்தை அவ்வளவாக பிடிக்காது என்று கூறி இருக்கிறார். ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

அதாவது ரஜினியின் பேட்டை மற்றும் அஜித்தின் விசுவாசம் படம் ஒன்றாக தான் திரையரங்குகளில் வெளியானது. அப்போது விசுவாசம் படத்தை தான் தியேட்டரில் நான் பார்த்தேன். அதுவும் தியேட்டரிலேயே நான்கு முறை விசுவாசம் படத்தை பார்த்ததாக ரத்னகுமார் கூறியிருந்தார்.

விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கும் நான் இப்போது அஜித்தின் ரசிகரும் கூட. லோகேஷ் அஜித்தை வைத்து படம் இயக்கினால் கண்டிப்பாக நானும் பணியாற்றுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அஜித்தை வைத்து கண்டிப்பாக படம் எடுப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் ரத்தினகுமார்.

இவ்வாறு விஜய்யின் ரசிகராக இருக்கும் ரத்தினகுமார் அஜித்தின் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இணையத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே கருத்துப் போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் ரத்னகுமார் பேசிய இந்த வீடியோ அதிகம் பரவி வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

Trending News