ரோலக்ஸ் வைத்து கனவை நினைவாக்கும் லோகேஷ்.. உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்கப் போகும் விஜய்

Director Lokesh: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இப்படத்தை ரசிகர்கள் தீபாவளி போல் கொண்டாடுவதற்கு பட்டாசுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் இந்த மாத கடைசியில் சென்னை நேரு உள்விளையாட்டு
அரங்கில் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அத்துடன் இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை பெற்று விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் லோகேஷ் கதை, விஜய்யின் நடிப்பு என்று இரு ஜாம்பவான்கள் இருப்பதால் கண்டிப்பாக வசூல் அளவில் சாதனை படைக்கும்.  இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் அவருடைய கைதி 2 மற்றும் விக்ரம் 2 எடுப்பாரா என்று எதிர்பார்த்த நிலையில் தலைவரை வைத்து ஒரு படத்தை எடுக்கப் போறார் என பேச்சுக்கள் அடிபட்டது.

Also read: ஒரே படத்தில் ஒரேடியாக உயர்ந்த லோகேஷ், நெல்சனின் சம்பளம்.. இதுக்கு தான் பெரிய இடத்து சகவாசம் வைக்கணும் போல

இதற்கிடையில் இவருடைய கனவு திட்டத்தையும் நிறைவேற்றும் வேண்டும் என்பதற்காக ரோலக்ஸ் உடன் இணையப் போகிறார். அதாவது ஏற்கனவே சூர்யாவை வைத்து இரும்புக் கை மாயாவி என்ற படத்தை எடுக்கப் போவதாக முடிவாகி இருந்தது. ஆனால் அது எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்று தெரியாத நிலையில் தற்போது லோகேஷ் சூர்யாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

அந்த வகையில் கூடிய விரைவில் சூர்யாவுடன், லோகேஷ் ஆசைப்பட்டு கொண்டிருக்கும் கனவு திரைப்படமான இரும்புக் கை மாயாவி ஆரம்பிக்கப்படும். இப்படம் 1962ல் டிசி காமிக்ஸ் நாவலான “The Steel Claw” கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இந்த கதையை லோகேஷ் அவருடைய பாணியில் எப்படி கொண்டு போகிறார் என்பதுதான் படத்தின் முக்கிய விறுவிறுப்பாக இருக்கப்போகிறது.

Also read: லியோ கெஸ்ட் ரோலில் வரும் மலையாள பகவதி.. பால் பப்பாளியை முழு சோற்றில் மறைத்த லோகேஷ்

மேலும் லோகேஷ், லியோ படத்தை முடித்த நிலையில் அடுத்து என்ன பண்ணலாம், எந்த படத்தை ஆரம்பிக்கலாம் என்று குழப்பத்தில் இருந்த பொழுது இவருக்கு அனைத்து ஆலோசனைகளையும் கூறி தற்போது இந்த முடிவை எடுக்க வைத்தது விஜய் தான். அதாவது நெல்சனை தூண்டிவிட்டு ரஜினி படத்தை எடுக்க வைத்தார். அதேபோல் அட்லீ கிட்டையும் பேசி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான வைத்து படம் எடுக்க வைத்தார்.

அந்த வகையில் தற்போது லோகேஷையும் உசுப்பேத்தி விட்டு சூர்யாவுடன் சேர்வதற்கு விஜய் தான் வழி வகுத்திருக்கிறார். இவர்களுடைய காம்பினேஷன் எந்த அளவிற்கு சூடு பிடிக்கும் என்பதை வேடிக்கை பார்க்க போகிறார் விஜய். லோகேஷ் உடன் யார் கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி நிச்சயம். அதனால் சூர்யா லோகேஷ் காம்போ தாறுமாறாக தெரிக்க விடப் போகிறது.

Also read: லியோ 1000 கோடி வசூல் உறுதியா.? தரமான பதிலடி கொடுத்த லோகேஷ்

- Advertisement -