லியோவில் அர்ஜுனால் ஏற்பட்ட குழப்பம்.. பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மாட்டிக்கொண்டு முழித்த லோகேஷ்

Leo Movie: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இந்த படத்தில் கோலிவுட் நட்சத்திரங்கள் முதல் பாலிவுட் பிரபலங்கள் என பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

ஆகையால் எல்லோருடைய கால்ஷீட்டும் நினைத்த நேரத்தில் கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல. சரியான திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே குறித்த நேரத்தில் படப்பிடிப்பை எடுத்து முடிக்க முடியும். அதுவும் லோகேஷ் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே லியோ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்.

Also Read : ரோலக்ஸ் மாதிரி அடுத்த ரத்தக் கலரியான ஹீரோவை களம் இறக்கிய லோகேஷ்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

இதனால் இன்னும் பதட்ட நிலையில் லோகேஷ் இருந்தார். இந்நிலையில் சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன் போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளனர். அதன்படி அர்ஜுனிடம் லோகேஷ் ஆரம்பத்தில் 40 நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார். ஆனால் அர்ஜுன் அதில் பாதி, அதாவது வெறும் 20 நாட்கள் மட்டுமே கொடுத்திருந்தாராம்.

இதனால் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இப்போது அர்ஜுனை வைத்து கிட்டத்தட்ட 17 நாட்கள் படப்பிடிப்பை லோகேஷ் முடித்திருக்கிறார். அடுத்த மூன்று நாட்கள் சூட்டிங் எடுத்துவிட்டு படப்பிடிப்பை முடிக்க உள்ளார். மேலும் அர்ஜுனின் கால்ஷீட் பிரச்சனையால் முதலில் லோகேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழித்துள்ளார்.

Also Read : கார், பைக் என அள்ளிய 6 இயக்குனர்கள்.. சம்பளம் போக சைடு கேப்பில் சிந்து பாடும் லோகேஷ்

அதன்பிறகு 40 நாட்களில் எடுக்க வேண்டிய காட்சிகளை 20 நாட்களிலேயே ஒரே கட்டமாக எடுத்து முடிக்க திட்டமிட்டு இருந்தாரா அல்லது அர்ஜுனின் காட்சியை லியோ படத்தில் குறைத்து விட்டாரா என்பது படம் வெளியானால் மட்டுமே தெரிய வரும். மேலும் இன்னும் சில தினங்களில் லோகேஷ் இப்படத்திற்கு பூசணிக்காய் உடைக்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு லியோ படத்தின் பின்னணி வேலைகள் இருக்கிறது. மேலும் ஆரம்பத்தில் அறிவித்தது போல சரியாக அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகைக்கு லியோ படம் வெளியிடும் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது. சரியான திட்டமிடுதலினால் மட்டுமே லோகேஷ் இதை முடித்து காட்ட இருக்கிறார்.

Also Read : விஜய்க்கு ஜோடி த்ரிஷா இல்லையா.? புரியாத புதிராக லியோ படத்தை மெருகேற்றும் லோகேஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்