அஜித்தை வைத்து இயக்க ஆசைப்படும் லோகேஷ்.. தூண்டில் போட்டு வரும் கலாநிதி

Director Lokesh : இந்த காலத்துக்கு ஏற்ப எந்த மாதிரியான படங்களை கொடுத்தால் வெற்றி அடையலாம் என்ற யுத்தியை அறிந்து அதன் வழியே இயக்குனர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது வெற்றி இயக்குனராக முன்னணி நடிகர்களை வழிநடத்தி வருபவர் லோகேஷ். இவர் எடுக்கக்கூடிய படங்களில் அதிகமான சண்டை காட்சிகள் இருந்தாலும் எப்படியாவது ரசிகர்களை கவர்ந்து அதிக அளவில் லாபத்தை பார்த்து வெற்றி அடைந்து விடுகிறது.

அந்த வகையில் கமல், விஜய், ரஜினி, சூர்யா மற்றும் கார்த்தி போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார். அதிலும் மல்டிஸ்டார் படங்களை உருவாக்கி அர்ஜூன், சஞ்சய் தத், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற வில்லன்களை கொடுத்து டெரர் படங்களாக எடுத்து வருகிறார். அப்படி தற்போது இவர் இயக்கிய லியோ படம் வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

அதனால் இப்படத்திற்கு தேவையான பிரமோஷனை படு ஜோராக லோகேஷ் செய்து வருகிறார். அத்துடன் பல பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அப்பொழுது லோகேஷிடம் LCU படத்தில் அடுத்து வேறு எந்த நடிகர் நடிக்க இருக்கிறார் என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் கூறியது எல்லாரையும் வைத்து படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. அதே மாதிரி அஜித்தையும் வைத்து படம் பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்த காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் லோகேஷ் ப்ராஜெக்ட் லிஸ்டில் அஜித் இருக்கிறார் என்பது தெரிகிறது. அதனால் இவர்கள் காம்போ கூடிய விரைவில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இவர்கள் இருவரும் இணையும் போது அந்த படத்தை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் கலாநிதி இப்பவே லோகேஷிடம் தூண்டில் போட்டு இருக்கிறார்.

ஏனென்றால் கலாநிதி தயாரிப்பில் இதுவரை அஜித் எந்த படத்தையும் பண்ணவில்லை. அதனால் பண்ணுகிற முதல் படமே தரமான படமாக அமைந்து அதிக வசூலை குவிக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் தந்திரமாக பிளான் பண்ணி இருக்கிறது. அதனால் இந்த விஷயங்கள் அனைத்தும் கூடிய விரைவில் நடைபெற இருக்கிறது. அப்படி மட்டும் நடந்து விட்டால் அஜித் ரசிகர்களுக்கு சரியான ட்ரீட் ஆக படம் அமைந்துவிடும்.

இதற்கிடையில் லோகேஷ் அங்கங்கே மிச்சம் வைத்த படங்களின் பார்ட் 2வை முடிக்க இருக்கிறார். அதேபோல சூர்யாவை வைத்து இரும்பு கை மாயாவி மற்றும் ரஜினியின் 171 வது படத்தையும் வெற்றிகரமாக இயக்கப் போகிறார். இப்படி லோகேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி ஹீரோக்களை வைத்து வெற்றி நடை போட்டு வருகிறார்.