எலியையும், பூனையையும் ஒரே படத்தில் கோர்த்துவிட்ட லோகேஷ்.. உச்சகட்ட பயத்தில் தளபதி 67 படக்குழு

விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த சூழலில் தற்போது தளபதி 67 படத்தில் நடிகர், நடிகைகளை லோகேஷ் தேர்வு செய்து வருகிறார். இந்தப் படத்தில் முன்னதாக பிரித்விராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பிரித்விராஜ் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் தளபதி 67 படத்தில் அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.

Also Read :விஜய்சேதுபதிக்கு அல்வா கொடுத்த லலித்.. எச் வினோத்தை பார்சல் செய்து அனுப்பியதன் பின்னணி

மேலும் தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இயக்குனர் கௌதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பதாக முன்னதாகவே தகவல் வெளியானது. இப்படத்தில் முக்கிய வில்லனாக விஷால் நடிக்கவிருக்கிறார். இப்போது லோகேஷ் இயக்குனர் மிஷ்கினையும் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்.

துப்பறிவாளன் படத்தால் விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கடுமையான சண்டை நிலவியது. இதனால் துப்பறிவாளன் இரண்டாவது பாகத்தை தானே எடுத்துக் கொள்வதாக விஷால் கூறிவிட்டார். மேலும் இப்போது வரை விஷால் மற்றும் மிஷ்கின் இடையே சுமுகமான உறவு இல்லை.

Also Read :என்னை மகிழ்விக்க ஆண்கள் தேவையில்லை.. விவாகரத்திற்கு அஜித், விஜய் பட நடிகை கூறிய அதிர்ச்சி காரணம்

ஆகையால் எலியும், பூனையும் ஆக உள்ள இவர்கள் இருவரும் ஒரே திரையில் எப்படி நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்திலே இவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்துவிடுமோ என்று உச்சகட்ட பயத்தில் தளபதி 67 படக்குழு உள்ளனர்.

ஏதோ திட்டம் வைத்து தான் லோகேஷ் இவ்வாறு செய்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள். இப்படத்தைப் பற்றிய அப்டேட் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் தொடங்க உள்ளது. இப்படத்தில் விஷால், மிஸ்கின் ஆகியோரை தொடர்ந்து சாண்டி மாஸ்டரும் நடிக்க உள்ளார்.

Also Read :விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட பிரபலம்.. நாசுக்காக ரிஜெக்ட் செய்த தளபதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்