திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கனக்கச்சிதமா ரஜினிக்காக உருவான கதை.. தலைவர் 171 சீக்ரெட்டை அவிழ்த்து விட்ட லோகேஷ்

Lokesh-Thalaivar 171: பிரேக் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற ரேஞ்சில் லோகேஷ் இப்போது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் பிஸியாக இருக்கிறார். தற்போது லியோ மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்த இவர் அதே சூட்டோடு தலைவர் 171க்காகவும் ஆயத்தமாகி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு திடீரென வெளியானது. அதிலிருந்தே படம் எந்த மாதிரியான ஜானரில் இருக்கும் என்ற கேள்வி ரஜினி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. ஏனென்றால் லோகேஷின் எல்.சி.யு தான் இப்போது பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. அதில் லியோவும் இருக்கிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும் படகுழு அதை கமுக்கமாகவே வைத்திருக்கின்றனர்.

இந்த சூழலில் தலைவர் 171 எல்.சி.யு-வில் உள்ளதா என்ற கேள்வி லோகேஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ரொம்ப நாட்களாகவே தனித்துவமான ஒரே படத்தை எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். சரியாக அது ரஜினி சாரிடம் கனகச்சிதமாக போய் உட்கார்ந்து விட்டது.

அதனால் இப்படம் எல்.சி.யு-வில் வராது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தனித்துவம் மிக்க ஒரு கதையாக இருக்கும் என்ற அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த கதையை சொல்லும்போது ரஜினி சார் அவ்வளவு சந்தோஷப்பட்டாராம். லோகேஷை கட்டிப்பிடித்து கலக்கிட்ட கண்ணா என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த சீக்ரெட்டை தற்போது அவிழ்த்து விட்டுள்ள லோகேஷ் நிச்சயம் இப்படம் என்னுடைய ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். அது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இதில் நடிக்கப் போகும் நடிகர், நடிகைகளின் அறிவிப்பும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதுதான் இப்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஜெயிலரில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரின் என்ட்ரி படத்திற்கு பக்க பலமாக இருந்தது. ஆனால் தலைவர் 171 அதையெல்லாம் ஓரம் கட்டும் வகையில் இருக்கும் என லோகேஷின் இந்த ஒரு பேட்டியிலேயே வெளிப்படையாக தெரிகிறது. ஆக மொத்தம் தலைவர் அலப்பறை விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

- Advertisement -

Trending News