திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அடேங்கப்பா! லோகேஷ் 250 தடவைக்கு மேல் பார்த்த கமலின் 2 படங்கள்.. சினிமாவை தாண்டி ஆண்டவருக்கு இப்படி ஒரு ரசிகனா

Lokesh Kanagaraj – Kamal Haasan: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்றைய சினிமாவின் அசைக்க முடியாத இயக்குனர்களின் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார். பேங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவருக்கு சினிமா பேக்ரவுண்ட் என எதுவும் கிடையாது. சினிமாவின் மீது இருந்த காதலால் இயக்குனராகி இன்று அதில் ஜெயித்தும் இருக்கிறார். இந்த இயக்குனரின் படத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறது என கவனித்த ரசிகர்களை, விக்ரம் படத்தின் மூலம் தன்வசம் இழுத்தார்.

லோகேஷ் சினிமாவுக்கு வந்த தொடக்கத்திலிருந்து தன்னை உலகநாயகன் கமலஹாசனின் தீவிர ரசிகன் என அடையாளப்படுத்தி இருக்கிறார், எந்த ஒரு மேடையிலும் அவர் கமலின் படத்தை பற்றி பேசாமல் இருந்தது இல்லை. ஒரு மேடையில் யார் கமலின் பெரிய ரசிகன் என கௌதம் மேனன் மற்றும் லோகேஷ்க்கு போட்டியே வந்தது. அந்த அளவுக்கு கமல் மீது அன்பு வைத்திருக்கிறார் லோகேஷ்.

அவர் கமல் மற்றும் சினிமா மீது வைத்திருந்த அதிக பற்று தான் குறுகிய காலத்திலேயே கமலை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு காரணமாக கூட இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு கமலுக்கு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். மேலும் இவர் இயக்கிய விக்ரம் படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது என சொல்லலாம். அந்த அளவுக்கு படமும் இருந்தது, அதன் வசூலும் இருந்தது.

லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக நடிகர் விஜய் உடன் இணைந்து இருக்கிறார். தற்போது லியோ படத்தின் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் அவர் பிரமோஷன் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். இது சம்பந்தமான பேட்டிகளில் அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு ரொம்பவும் வெளிப்படையாக லோகேஷ் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவருடைய பேட்டிகள் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்த லோகேஷ் கனகராஜுக்கு கமலின் படங்கள் தான் சினிமாவை கற்றுக் கொடுத்தது என்று சொல்லி இருக்கிறார். அதிலும் கமல் நடித்த சத்யா மற்றும் விருமாண்டி என்னும் இரண்டு படங்களை 250 தடவைக்கு மேல் பார்த்திருப்பதாகவும், அந்த இரண்டு படங்கள் தான் தனக்கு சினிமாவை உருவாக்க கத்துக் கொடுத்ததாகவும் சொல்லி இருக்கிறார்.

சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கமலஹாசன் இருக்கிறார். அவருக்கு நிறைய பேர் தீவிர ரசிகர்களாக இருப்பார்கள். அத்தனை பேரும் வியக்கும் அளவிற்கு இருக்கிறது லோகேஷ் கனகராஜ் சொன்ன விஷயம். ஒரு படத்தை 250 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு கமலை ரசித்திருக்க வேண்டும் என்பது இதில் தெரிகிறது.

- Advertisement -

Trending News