ட்விஸ்ட்டுக்கு மேல ட்விஸ்ட்.. லியோ இரண்டாம் பாதி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

Leo Second Half Twitter Review: மாதக்கணக்கில் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த லியோ இன்று பெரும் ஆரவாரங்களுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 9 மணிக்கு காட்சிகள் ஆரம்பித்தாலும் மற்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே படத்தைப் பார்த்த ரசிகர்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் அதன் விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

leo-review
leo-review

அதில் இரண்டாம் பாதி எப்படி இருக்கு என்பதை இங்கு விரிவாக காண்போம். லோகேஷ் கனகராஜ் என்றாலே வெறித்தனம் தான். அதற்கு ஏற்றார் போல் படம் டைட்டில் கார்டு போடுவதிலிருந்தே அலப்பறையை ஆரம்பித்து விடுகிறது. அதை தொடர்ந்து ஒவ்வொரு காட்சியும் சரவெடி ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

review-leo
review-leo

படம் எல்.சி.யு-வில் வருமா என்று குழம்பிப் போயிருந்த ரசிகர்களுக்கு ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் காத்திருக்கிறது. அதிலும் விஜய்யின் நடிப்பு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மாஸ் இருந்தால் பரவாயில்லை. ஆனால் படம் முழுவதுமே மாஸாக இருக்கிறது என சில ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

twitter-review
twitter-review

மேலும் முதல் பாதி மெதுவாக நகர்ந்த வேளையில் இடைவேளைக்கு முன்பான காட்சியும், இரண்டாம் பாதி தொடக்கமும் வேற லெவலில் இருக்கிறது. அதேபோன்று நா ரெடி, லியோதாஸ் அறிமுகம், எல் சி யு கனெக்ட் ஆகும் தருணம் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்கு அனிருத்தின் இசையும் பக்க பலமாக உள்ளது.

twitter-review-leo
twitter-review-leo

அது மட்டுமின்றி முதல் பாதியில் ஃபேமிலி சென்டிமென்ட் என நகரும் வேளையில் இரண்டாம் பாதியில் மொத்தமும் ஆக்ஷனுக்கு மாறிவிடுகிறது. அதிலிருந்து கிளைமாக்ஸ் வரையில் பரபரப்பு தான். அந்த வகையில் லியோ ரசிகர்களுக்கு வெறித்தனமான விருந்தாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

leo-review1
leo-review1
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்