விஜய் மீது உள்ள ஆத்திரத்தில் சிவகார்த்திகேயனுக்கு கதை கூறிய லோகேஷ்.. நீங்க இல்லனா எனக்கு ஆளே இல்லையா!

சிவகார்த்திகேயன் வளர்ச்சி அவரே நம்பாத அளவிற்கு வளர்ந்து வந்து கொண்டே இருக்கிறார். உண்மையாகவே அவர்கள் வளர்ச்சியை பார்த்து பல பேர் பொறாமையில் அவரை வளர விடாமல் செய்து வருகிறார்கள். முக்கியமாக தனுஷ் மூலமாக வந்து தனுஷுக்கு மேலே வந்து விட்டார். இது மாதிரி பல எதிர்ப்புகள் அவருக்கு மறைமுகமாக இருந்து வருகிறது.

படம் ஓடவில்லை என்றாலும் அவ்வளவு கெட்ட பேர் வராமல் அடுத்த படத்தை மிகப்பெரிய ஹிட் ஆகி விடுகிறார். 45 கோடி வாங்கும் ஹீரோவாக வந்துவிட்டார். 100 கோடி கலெக்ஷனையும் பெற்றுவிட்டார்.

இவருக்கு என்று குழந்தைகள் மற்றும் பெண்கள் ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. இவர் மீது என்ன குறைகள் சொன்னாலும் அது எடுபடவில்லை. ரஜினி அந்த இடத்தை விஜய் நகைச்சுவையாக நடித்து பெண்கள் குழந்தைகளை தன் பக்கம் இழுத்தார்.

அதையே சிவகார்த்திகேயனும் செய்து இந்த இடத்துக்கு வந்துவிட்டார். தற்பொழுது தெரியாமல் யாரோ அடுத்த விஜய் என்று சொன்னார்களோ அதற்கு தகுந்த மாதிரி அவர் படம் பண்ணும் டைரக்டர் அனைவருமே விஜயின் டைரக்டர்கள்.

Sivakarthikeyan Lokesh

தற்பொழுது கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்து முருகதாஸ் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரும் லோகேஷ் கனகராஜ் நண்பர்கள் ஆனால் இவர் வைத்து படம் பண்ண யோசித்து வந்த லோகேஷ் கனகராஜ் தற்போது இவருக்கு ஒரு கதையை சொல்லி இருக்கிறார். எல்லாம் விஜய் மீது உள்ள கோவம்.

சிவகார்த்திகேயனுக்கு தேடி வந்து கதை சொல்லிய லோகேஷ்

அவர் படத்தில் நடிக்க இவரிடம் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். அமரன் படத்தில் நடித்த முடித்து அவரது தோற்றத்தை முழுவதும் மாற்றிவிட்டார் அதை பார்த்து லோக்கேசுக்கும் படம் பண்ண எண்ணம் வந்துள்ளது.

பக்கா கேங்ஸ்டர் கதையை அவருக்கு தகுந்த மாதிரி சொல்லி இருக்கிறாராம். முருகதாஸ் படத்தை முடித்து கண்டிப்பாக தொடங்க வாய்ப்பு இருக்கிறது. சிவகார்த்திகேயன் அடுத்த விஜய் இல்லை அவரைத் தாண்டி வந்து விடுவார் போல என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டார்.

தற்பொழுது அரசியலுக்காக ரசிகர்களை சந்தித்து காய் நகர்த்தி வருகிறார். எவ்வளவு வேகமாக ஒரு நடிகர் வளர்வது என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். கூடிய விரைவில் இவரை வைத்து சங்கர், மணிரத்தினம் கூட இவரை வைத்து இயக்கலாம் என்று அளவிற்கு வந்து விடுவார் என்று கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்