ஏஜென்ட் விக்ரமை மானாவாரியாக திட்டிய தளபதி-67 நடிகர்.. கமலுக்காக லோகேஷ் எடுத்த முடிவு

உலக நாயகன் கமலின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் விக்ரம் திரைப்படத்தால் கமலுக்கு மிகப்பெரிய லாபத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார். இதன் மூலம் அவருடைய சிறந்த ரசிகன் என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த கமல் அவருக்கு பல பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் தற்போது தளபதி 67 திரைப்பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் லோகேஷின் குருவான கமலை நடிகர் மன்சூர் அலிகான் படு கேவலமாக பேசி இருப்பது திரை உலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Also read: கமல் கேரவனில் இவ்வளவு ரகசியங்களா.? திருப்தியடையாத ஆண்டவரின் மறுபக்கம்

அவர் சாதாரணமாக பேசினாலே அது சர்ச்சையாக தான் இருக்கும். அப்படி இருக்கும் போது அவர் கமலை பற்றி மிகவும் மோசமாக பேசி இருக்கிறார். சோசியல் மீடியாவில் கருத்து சொல்லும் கமல் அதிலேயே ஆட்சி செய்து கொள்ளட்டும் என்றெல்லாம் பேசி இருந்தார்.

மேலும் கமல் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தற்போது சில விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் மன்சூர் அலிகானுக்கு கிடைக்க இருந்த மிகப் பெரிய வாய்ப்பும் தற்போது பறிபோகும் நிலையில் இருக்கிறது.

Also read: அடுத்த ஹீரோயினை உறுதி செய்த லோகேஷ்.. வேகமெடுக்கும் தளபதி 67

அதாவது லோகேஷ் கனகராஜுக்கு மன்சூர் அலிகானை மிகவும் பிடிக்கும் என்று அவர் பலமுறை பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார். அதற்கேற்றார் போல் விக்ரம் திரைப்படத்தில் கூட மன்சூர் அலிகானின் ரெஃபரன்ஸ் பல இடத்தில் இருந்ததை நாம் பார்த்திருப்போம்.

இதனால் அவர் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. அந்த வகையில் மன்சூர் அலிகானை லோகேஷ் தளபதி 67ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தவளை தன் வாயாலே கெடும் என்பது போல மன்சூர் அலிகான் தற்போது அந்த வாய்ப்பை இழந்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே தான் பார்த்து, ரசித்து, வியந்த தன்னுடைய குருவை மன்சூர் அலிகான் இவ்வளவு மோசமாக பேசி இருப்பது லோகேஷை கவலையடைய வைத்துள்ளது. தான் நேசிக்கும் மனிதரை பற்றி மன்சூர் அலிகான் இப்படி அவதூறாக பேசியதால் அவரை இனிமேல் தன்னுடைய படங்களில் நடிக்க வைக்க கூடாது என்ற முடிவில் அவர் இருக்கிறாராம். இதனால் மன்சூர் அலிகான் தனக்கு கிடைக்க இருந்த ஒரு நல்ல வாய்ப்பை இழந்துள்ளார்.

Also read: விக்ரம் பட வெற்றி.. லோகேஷ்-க்கு ஒரு கோடி மதிப்பிலான காரை பரிசளித்த கமலின் புகைப்படம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்