லோகேஷ்சை விஜய் படுத்தும் பாடு.. தளபதி காட்டும் ஆர்வத்தால் காஷ்மீரில் நடக்கும் கலவரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது லியோ திரைப்படம்.  இதன் படப்பிடிப்பிற்காக அனைத்து ஆர்டிஸ்ட்களும் ஒரே விமானத்தில் காஷ்மீருக்கு சென்றனர். இவர்கள் இந்த படத்திற்கு பூஜை போட்ட உடனே தொடர்ந்து இந்த படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரோமோ என விரைவாக வெளியிட்டனர்.

மேலும் இந்த ப்ரோமோ ரிலீஸ் ஆன பிறகு இணையதளத்தில் ஒவ்வொருவரும் இது LCU கதைகளத்தில் வரும் என்று யூகித்து வருகிறார்கள். அதற்கான காரணங்களையும் அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் இதற்கு லோகேஷ் LCU கதைக்களமாக இருக்காது என்று சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

Also read: லியோ 100% என் படம்னு சொன்னதெல்லாம் பொய்யா.. செய்வதறியாமல் புலம்பும் லோகேஷ்

ஆனால் அங்கே இப்பொழுது பனிப்பொழிவு ஜாஸ்தியாக இருக்கிறதாம். இந்த பனிப்பொழிவு காரணமாக அங்கு இருக்கும் அனைத்து ஆர்டிஸ்ட்களும் நடிப்பதற்கு அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் படப்பிடிப்பு எந்த காரணத்திலும் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக விஜய் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் வெளிப்பாடாக பனிப்பொழிவை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சொன்ன நேரத்துக்கு முன்பாகவே வந்து எல்லாரையும் அசத்துகிறாராம். இந்த படத்தில் விஜய் காட்டும் ஆர்வத்தை பார்த்து அனைவரும் அரண்டு போய் இருக்கிறார்கள். இந்த ஆர்வத்தினால் விஜய்யிடம் லோகேஷ் படாதபாடு பட்டு வருகிறார்.

Also read: லியோ படத்தால் மிஸ்கினுக்கு எகுறும் சம்பளம்.. ஒரு நாள் சம்பளத்தை கேட்டு வாயை பிளந்த திரையுலகம்

இப்படி விஜய் செய்வதற்கு காரணம் அவர் இந்த படத்தை மே மாதத்திற்குள் நடித்து முடித்து விட வேண்டும் என்பதற்காகவே. அதன் பின் என்னை விட்டு விடுங்கள் என்று அடிக்கடி கூறி வருகிறார். இதனால் மற்ற துணை நடிகர்களும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் பெரிய கலவரம் ஏற்பட்டு வருகிறது. மேலும் விஜய் சொன்னபடி இந்த படத்தின் சூட்டிங்கை மே மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று லோகேஷ் முயற்சி செய்து வருகிறார்.  இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் பாணியில் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்பொழுது விஜய் இந்த அளவுக்கு நெருக்கடி கொடுப்பது எப்படி சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.

Also read: ராஜமவுலியை ஒரே சீனில் மிரட்டி விட்ட லோகேஷ்.. கமல் முன்னாடி நடந்த சுவாரசியமான சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்