சிங்கமும், சிறுத்தையும் ஒரே படத்திலா?. 10 படத்துக்குள்ள மொத்த ஹீரோவும் லாக் செய்யும் லோகேஷ்

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் ஹீரோக்களின் விருப்பமான இயக்குனராக இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை இவருடைய ஒரு படத்திலாவது நடித்துவிட்டு தான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் லோகேஷ் இன்னும் பத்து படங்கள் தான் இயக்குவேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

ஏனென்றால் லோகேஷின் அதிகபட்ச ஆசை இன்னும் ஒரு பத்து வருடங்கள் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த பத்து வருடத்திற்குள் மொத்த ஹீரோக்களையுமே வைத்து படம் எடுத்து விடுவார் போல. ஏனென்றால் லோகேஷின் எல்சியுவில் நாளுக்கு நாள் நடிகர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Also Read : அடுத்த ஹீரோவை உறுதி செய்த லோகேஷ்.. பிரம்மாண்ட தயாரிப்பாளர் கூட்டணியில் வெளிவர உள்ள அப்டேட்

அதாவது லியோ படத்திலேயே எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் வைத்து படமெடுக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தனர். கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்காக சில காட்சிகளில் மட்டும் சூர்யா வந்திருப்பார். ஆனால் இவர்கள் இருவரையும் முழுசாக ஒரு படத்தில் சேர்த்து எடுக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசை.

அதன்படி இந்த சிங்கம் மற்றும் சிறுத்தை விரைவில் ஒரு படத்தில் இணைய போகிறது. அதாவது லோகேஷ் ஆரம்பத்தில் சூர்யாவை வைத்த இரும்பு கை மாயாவி என்ற ஒரு படத்தை எடுக்க முயற்சி செய்தார். ஆனால் சில காரணங்களினால் அது தடைப்பட்டு நிற்கிறது. லோகேஷ் கார்த்தியை வைத்து கைதி என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்.

Also Read : கமலை பார்த்து சினிமாவில் சாதித்த 6 இயக்குனர்கள்.. பாலிவுட்டை மிரள விடும் லியோ லோகேஷ்

இந்த படத்தில் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினி படத்தை முடித்தவுடன் அடுத்ததாக கைதி 2 படத்தை லோகேஷ் எடுக்கப் போகிறாராம். இந்த படத்தில் ரோலகஸ் செய்யும் சேர்த்து எடுங்கள் நான் சூர்யாவிடம் அனுமதி வாங்கி தரேன் என தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

இதற்கு லோகேஷும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஏற்கனவே விக்ரம் படத்தில் ரோலக்ஸ் நடித்து இருந்தாலும் கார்த்தியின் குரல் மட்டும் கேட்கும். இப்போது ஒரே திரையில் டில்லி மற்றும் ரோலக்ஸை பார்க்க மரண மாசாக இருக்கும். மேலும் கண்டிப்பாக இந்த படம் கோடிகளை வாரி குவிக்கும் என்பதால் தான் தயாரிப்பாளர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

Also Read : படுக்கையை பகிர்ந்ததால் கிடைத்த பட வாய்ப்பு.. நடிகைகளை அநாகரிகமாக பேசிய லோகேஷ் பட வில்லன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்