ஐடி ரெய்டுக்கு தளபதியின் ரியாக்சன்.. மாஸ்டர் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்திற்கான புரமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அந்த வகையில் பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பேட்டியின்போது லோகேஷிடம், ‘மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்  நெய்வேலியில் நடந்துட்டு இருந்தப்போ தான் விஜய் சாருக்கு ஐடி ரெய்டு நடந்தது. அதுக்கப்புறம் விஜய் சாரோட மனநிலை எப்படி இருந்தது?’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த லோகேஷ், ‘ஐடி வேலைகள் எல்லாம் முடிச்சுட்டு விஜய் சார் மறுபடியும் சூட்டிங் வந்தப்போ நாங்க எல்லாரும் அவர் மைண்ட் செட் எப்படி இருக்கும்னு நெனச்சு பயந்தோம். அவர்கிட்ட எப்படி பேசுறதுன்னு இறுக்கமா இருந்தோம். ஆனா அவர் அந்த பதற்றத்தல்லாம் உடைச்சுட்டாரு’ என்று  பதிலளித்துள்ளார்.

LokeshKanagaraj
LokeshKanagaraj

அதோடு மட்டுமில்லாமல், தளபதி விஜய் இந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு செட்டுக்குள்ள வர்றப்போ எல்லாரோட மூஞ்சியும் பார்த்து ‘ஏன் எல்லாரும்  இப்படி மூஞ்சிய வச்சிருக்கீங்க’ என கேட்டு சிரித்தாராம்.

இதுதான் எங்கள் தளபதி என ரசிகர்கள் விஜய்யை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். மேலும் மாஸ்டர் படத்தை காணவும் ஆவலாக வெயிட் செய்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்