லியோ படத்தில் புதிதாய் கிடைத்த நான்கு அப்டேட்.. எப்படி கசிந்தது என சிபிஐ போல வலை வீசும் லோகேஷ்

Director Lokesh Kanagaraj: படம் வெளிவருவதற்குள் நாளுக்கு நாள் ஹைபை உருவாக்கி வரும் படம் தான் லியோ. இப்படத்தின் மீது பல எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில் இதன் அப்டேட் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் விஜய் படமான லியோ படத்தின் இயக்கத்தை 50% லோகேஷ் கனகராஜ் முடித்துள்ள நிலையில், இப்படத்துக்குரிய தகவல் கசிந்து மிகுந்த ஷாக்கை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் அப்டேட் குறித்து எந்த தகவலும் வெளியிடாது சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளார் விஜய்.

Also Read: ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ரெடியாகும் ஆப்பு.. களையெடுக்க காத்திருக்கும் கங்குலி அண்ட் கோ

இந்நிலையில் இது போன்ற அப்டேட்டுகள் வெளிவந்து சஸ்பென்சை முறியடிக்கும் விதமாக அமைந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் நடைபெறுவதால் இது போன்ற செய்தி பரவத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் புதிதாய் மெடோனா செபாஸ்டின் இடம்பெறும் தகவல் வெளிவந்து எதிர்பார்ப்பை உண்டுபடுத்திய நிலையில், தற்பொழுது சென்னையில் உள்ள ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். இதன் தொடக்கத்திலேயே மழை பொழிந்ததால் ஒரு வாரம் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

Also Read: தொழிலதிபருடன் நெருக்கம் காட்டிய நம்பர் நடிகை.. பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா?

அதைத்தொடர்ந்து படத்தின் சூட்டிங் ரத்து என செய்தி பரவ தொடங்கியது. ஏற்கனவே இப்படத்தில் சப்போட்டிங் ஆக்டர்ஸ் ஆக ஆக்ஷன் கிங் அர்ஜுன்- சஞ்சய் தத் அண்ணன் தம்பியாக நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்தது.

மேலும் படத்தில் விஜய்யின் தங்கையாக மெடோனா செபாஸ்டின் நடிக்கும் தகவலும் வெளிவந்தது. இப்படத்தின் சூட்டிங்-க்கு ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் ஒரு பெரிய கஞ்சா தோட்டமே போட்டு இருக்கிறாராம் லோகேஷ். இது குறித்த அப்டேட்டும் வெளியாகி யாரு எப்படி இது போன்ற அப்டேட்டுகளை வெளியிடுகிறார் என ஒரு சிபிஐ போல வலை வீசி தேடி வருகிறார் லோகேஷ்.

Also Read: சினிமா நிழல் கூட வேண்டாம் என வாரிசுகளை தவிர்க்கும் 4 ஹீரோக்கள்.. மணிரத்தினம் கூப்பிட்டும் மறுத்த மாதவன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்