ஹாலிவுட் படத்தின் காபி தான் லியோவா.? முக்கியமான ஆதாரம் சிக்கியதால் மாட்டிக் கொண்ட லோகேஷ்

வாரிசு படத்திற்கு பின் தளபதி 67 படத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியானதிலிருந்து அது ஹாலிவுட் படத்தின் காப்பி என்று இணையத்தில் நெட்டிசன்கள் பெரும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். விஜய்யின் 67-வது படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டு அந்த படத்தின் அனல் பறக்கும் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.

இதைப் பார்த்த பிறகு இந்த ப்ரோமோ பல படங்களில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றார்கள். அதுமட்டுமல்ல ரஜினி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக இருக்கும் ஜெயிலர் படத்தின் ப்ரோமோவில் இடம் பெற்ற காட்சி ஒன்று லியோவிலும் இடம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read: லியோவை ஓவர் டெக் செய்த மகிழ் திருமேனி.. அஜித்துக்கு வில்லனாகும் ரொமான்டிக் ஹீரோ

ஆனால் தற்போது லியோ படம் இங்கிலீஷ் படத்தின் காப்பி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தரமான சம்பவம் நடந்திருக்கிறது. என்னதான் பொய் சொன்னாலும், அமேசான் செய்த வேலையால் லோகேஷின் முகத்திரை கிழிந்து தொங்கும் அளவுக்கு முக்கியமான ஆதாரம் சிக்கியுள்ளது.

லியோ படம் ஆரம்பத்திலிருந்து தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமாக இயக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் அதிநவீன கேமராக்களின் உதவியுடன் வேகவேகமாக நடைபெறுகிறது. ஆனால் இந்த படம் ஆங்கிலப் படத்தின் தழுவல் என கூறப்பட்டுள்ள நிலையில், அது பொய் என இயக்குனர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

Also Read: வேற லெவல் பிரம்மாண்டத்துடன் தயாராகும் லியோ.. ஒரு நாளைக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா?

எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் (A History of Violence) என்ற படத்தில் ஒரு சில காட்சிகளை மட்டுமே நாங்கள் எடுத்து உள்ளோம். முழு படமும் இல்லை என கூறிவந்தனர். எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படமானது அமேசான் பிரைமில் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்ட படம். ஆனால் கடந்த 25 நாட்களாக இந்த படம் அமேசான் பிரைமில் நீக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில் மட்டும் இந்த படம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனை உறுதியாக, ஆமாம்! இந்த படத்தில் இருந்து தான் நாங்கள் எடுக்கிறோம் என்று கூறினால் எந்த பிரச்சனையும் வராது. எதற்காக இல்லை என மறுக்கிறார்கள் என்று இனிமேல் தான் அனைத்தும் புரியும். லோகேஷ் நிஜமாகவே ஹாலிவுட் படத்தை காப்பி அடிக்க வில்லை என்றால், எதற்காக அமேசான் இப்படிப்பட்ட வேலையை செய்து இருக்கிறது என்ற கேள்வி ரசிகர்கள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

Also Read: லியோ படத்தை விட ரஜினிக்காக மெனக்கெடும் லோகேஷ் .. விக்ரமை விட வெறித்தனமாக தயாராகும் ஸ்கிரிப்ட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்