மாஸ்டர் விஜய்(JD) கேரக்டர் இப்படித்தான் இருக்கும்.. ரிலீஸ் சமயத்தில் உசுப்பேற்றி விட்ட லோகேஷ் கனகராஜ்

நீண்ட நாள் காத்திருப்புக்கு பலனாக வருகின்ற பொங்கலுக்கு ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் கோலாகலமாக வெளியாக உள்ளது.

தமிழ்நாடு அரசு 100 சதவிகிதம் தியேட்டர்களுக்கு அனுமதி அளித்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக பட ரிலீசுக்கான வேலைகளைத் தொடங்கி விட்டனர். நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் தியேட்டர் ஓனர்கள் மாஸ்டர் படத்தைப் பற்றி கூறி ரசிகர்களை வெறியேத்தி வருகின்றனர்.

நீண்ட நாட்களாகவே மாஸ்டர் படம் எப்படி இருக்கும் என்ற கனவு ரசிகர்கள் மண்டைக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் கடந்த ஆறு மாதமாக படக்குழுவினர் யாருக்கும் இன்டர்வியூ கொடுக்காததால் படத்தைப் பற்றிய எந்த ஒரு ரகசியம் வெளிவரவில்லை.

master-cinemapettai
master-cinemapettai

தற்போது ரிலீஸ் சமயத்தில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் மாஸ்டர் படத்தின் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை ஒற்றை வார்த்தையில் கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்யின் பேராசிரியர்(professor) கதாபாத்திரம் நக்கலும் நையாண்டியும் கலந்த மாதிரி கதாபாத்திரமாம். விஜய் வரும் சீன்கள் எல்லாமே ஒரு மாதிரி லந்தாக கெத்தாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் போக்கிரி படத்தை ரசிகர்கள் மண்டைக்குள் ரீவைண்ட் செய்து கொண்டிருக்கின்றனர். அந்தப் படத்தில்தான் விஜய் ஒரு மாதிரி லந்தா செம கெத்தாக வலம் வந்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்