மொத்தமாய் கவுத்துவிட்ட மன்சூர்.. மாஸ் ஹீரோவை முழு வில்லனாக லாக் செய்த லோகேஷ்

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் தன்னுடைய கதைக்கு எந்த அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவுக்கு அந்த கதைக்கு ஏற்ற வில்லனை தேர்ந்தெடுப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். ஹீரோவுக்கு நிகராகவும் ஹீரோவை விட ஒரு படி மேலாக இருக்கும் வில்லனை தான் அவர் தன்னுடைய படங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது அதிக அளவில் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் இரண்டு நிமிட காட்சியில் ரோலக்ஸ் என்னும் முரட்டு வில்லனாக வந்த சூர்யா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். இன்று வரை அந்த ரோலக்ஸ் கேரக்டரை மட்டும் வைத்து படம் எடுங்கள் என லோகேஷை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

இந்த வரிசையில் வந்திருக்க வேண்டியவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். லோகேஷ் தனிப்பட்ட முறையில் மன்சூர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவரை வைத்து படமெடுப்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை என நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அவருடைய இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான லியோ படத்தில் மன்சூருக்கு ஒரு சின்ன ரோலும் கொடுத்து இருந்தார்.

Also Read:மன்சூர் அலிகான் போல் வம்பில் சிக்கிய ரஜினி.. உங்க வயசுக்கு இப்படி பேசலாமா தலைவரே.!

மன்சூர் அலிகான் இனி அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் படங்களில் முக்கிய வேதத்தில் நடிப்பார் என அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் திரிஷா குறித்து அவர் பேசிய சர்ச்சை பேச்சால் மொத்தமும் பாழாய் போய்விட்டது. லோகேஷ் அவருடைய பேச்சுக்கு நேரிடையாகவே கண்டனம் தெரிவித்ததால் இனி இவர்கள் இருவரும் இணைவது வாய்ப்பில்லை என்பது நன்றாக தெரிகிறது.

லோகேஷ் அடுத்து இயக்கப் போகும் படத்திற்கு மிகப்பெரிய மாஸ் வில்லனை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக ஹீரோ கேரக்டரில் நடித்தும் மக்களிடையே அங்கீகாரம் பெறாமல் இருந்தவர்தான் அருண் விஜய். அஜித் படத்தில் நடித்த விக்டர் கேரக்டரால் இன்று அவருடைய மொத்த சினிமா கேரியரும் மாறிவிட்டது.

தற்போது லோகேஷ் அருண் விஜய்யை தான் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைக்க இருக்கிறாராம கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கும் இந்த கதையில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாலாவுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் வணங்கான் படத்தில் வேலைகள் முடிந்த பிறகு இந்தக் கூட்டணியின் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

Also Read:திரிஷா விஷயத்துல அவங்க பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. அடாவடியில் முடிந்த மன்சூரின் பிரஸ் மீட்