தலைவர்-171 பயங்கர வன்முறையை சூசகமாக காட்டும் போஸ்டர்.. லோகேஷால் கெட்டு குட்டிச்சுவர் ஆகும் 2k கிட்ஸ்

Thalaivar 171: தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவருடைய படங்கள் இவரது திறமையின் அடையாளங்களாக மாறிவிட்டன. இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பல முன்னணி ஹீரோக்களும் இவருடைய இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்று தவமாய் தவமிருக்கிறார்கள்.

மாநகரம் படத்தில் தொடங்கிய இவருடைய பயணம் இப்போது தலைவர் 171 மூலம் வெற்றிப் பயணமாக இன்னும் உயரே தான் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவது படமே நடிகர் கார்த்தியை வைத்து இயக்க, இவருக்கு அடுத்து உடனே தளபதியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்கள் ஆன கமலை இயக்கிய கையோடு இப்போது ரஜினியையும் இயக்க இருக்கிறார்.

Also Read:ஆர்வக்கோளாறில் சன் பிக்சர்ஸ் செய்த மட்டமான வேலை.. எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கியதால் தலைவலியில் ரஜினி

லோகேஷ் கனகராஜ் அடுத்து அடுத்து ஹிட் படங்கள் கொடுத்தாலும், அவருடைய கதைக்களங்கள் கொஞ்சமும் மாறாமல் ஒரே மாதிரியாக போதை பொருள் கடத்தல் மற்றும் வன்முறை என ஒரே புள்ளியை தான் கதை கருவாக வைத்து இருக்கிறது. தற்போது தலைவர் 171 படமும் அதே ஜானரில் தான் வரப்போகிறது என போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக வெளியிட்ட போஸ்டரில் அனிருத் இசையமைக்க இருக்கிறார் என கூறப்பட்டிருந்தது. அதேபோல் புதிதாக, ஆக்சன் அன்பறிவு என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இதன் மீது ரத்தம் தெளித்திருப்பது போல் கிராபிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.

Also Read:ஷங்கர் பேச்சை கேட்காமல் போன ரஜினி.. ராங் ரூட்டில் சிக்கி விழி பிதுங்கிய சம்பவம்

லோகேஷ் கனகராஜ் மீண்டும் வன்முறை கதையைத்தான் கையில் எடுத்திருக்கிறார். இப்போது இவருக்கு 2 கே ஹிட்ஸ்கள் தான் அதிகமாக ரசிகர்களாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் பொழுது இவர் தன்னுடைய படங்களில் தொடர்ந்து வன்முறை மற்றும் போதை பொருளை மையப்படுத்தி எடுத்து வருவதால் அவர்கள் அந்தப் பாதையை எடுப்பதற்கு இது இன்ஸ்பிரேஷன் ஆக மாறிவிடும்.

தமிழ் சினிமாவில் அதிகமாக கவனிக்கப்படும் இயக்குனராக இருக்கும் இவர் இது போன்ற கதைக்களங்களை சமூக விழிப்புணர்வோடு தவிர்ப்பது நல்லது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தையும் இது போன்ற கதைகளில் நடிக்க வைப்பதால் அவருக்கும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Also Read:ஆண்டவருக்கே விபூதி அடித்த சூப்பர் ஸ்டார்.. ஆசை காட்டி தன் பக்கம் இழுத்த சன் பிக்சர்ஸ் மாறன்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -