மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மாஸ்டர் லோகேஷ் கனகராஜ்.. பதட்டத்தில் குடும்பத்தினர்!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே முன்னணி இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர் என்ற மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் எனும் படத்தை இயக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி போட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

விக்ரம் படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை முடித்துவிட்டு தற்போது விஜய்யின் அடுத்தப் படத்திற்கு கதை எழுதி வருவதாகவும், விக்ரம் படத்திற்கு முன்னரே விஜய் படத்தின் கதையை மொத்தமும் முடித்துவிட லோகேஷ் கனகராஜ் பிளான் பண்ணி உள்ளதாகவும் அவரது வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்தது.

இந்நிலையில் திடீரென லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தனிமைப்படுத்தி கொண்டதாகவும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளாராம்.

lokesh-kanagaraj-covid-tested-positive
lokesh-kanagaraj-covid-tested-positive

லோகேஷ் கனகராஜுக்கு நண்பர்கள் வாயிலாக கொரானா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். விரைவில் அவர் பூரண குணமடைந்து மீண்டு வர ரசிகர்கள் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜுக்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் இருந்தும் தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில வருடங்களில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வளர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- Advertisement -