லியோ படத்தை விட ரஜினிக்காக மெனக்கெடும் லோகேஷ் .. விக்ரமை விட வெறித்தனமாக தயாராகும் ஸ்கிரிப்ட்

ஒரு சில படங்களை மட்டுமே இயக்கினாலும் தற்போது கோலிவுட்டில் டாப் கீரில் சென்று கொண்டிருக்கும் இளம் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு லோகேஷ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை பார்த்த பிறகு, ரஜினிக்கு அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. இதனால் லோகேஷ் கனகராஜை ரஜினி வான்டட் ஆக கூப்பிட்டு கதை கேட்டிருக்கிறார்.

Also Read: வேற லெவல் பிரம்மாண்டத்துடன் தயாராகும் லியோ.. ஒரு நாளைக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா?

ஏற்கனவே எப்படியாவது ரஜினியை வைத்து இயக்க வேண்டும் என்ற கனவில் இருந்தார் லோகேஷ். அப்படி மின்னலை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட லோகேசுக்கு, வரப்பிரசாதமாக  ரஜினியே பச்சை கொடி  காட்டியிருக்கிறார். இப்பொழுது லோகேஷ் எண்ணமெல்லாம் ரஜினியை எப்படி திரையில் காட்ட வேண்டும் என்பதுதான்.

விக்ரம் படத்தில் கூட கமலை கடைசி வரைக்கும் நடிக்க வைத்திருப்பார். கடைசியில் தான் ஆக்ரோஷமாக காட்டியிருப்பார். வயது மூப்பு காரணமாக அப்படி செய்தார். அதேபோல் ரஜினியையும்  காட்டி மெருகேற்றி விடுவார்.

Also Read: இப்ப புரியுதா அண்ணாச்சியோட பவர்.. விஜய், அஜித்தை தாண்டி முதல் இடத்தை பிடித்தாரா தி லெஜன்ட்.?

பெரிய ஹீரோக்களால் இளசுகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும் அவர்களுக்கென்று தனியான ஒரு ட்ராக் வைத்திருக்கிறார் லோகேஷ். இதையெல்லாம் சரி செய்துவிட்டு ரஜினிக்காக மெனக்கெட்டு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். இது நிச்சயம் விக்ரம் படத்தை விட வெறித்தனமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு பக்கம் விஜய்யின் லியோ படத்திற்கு அதிநவீன கேமராக்கள் மூலம் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மறுபுறம் லோகேஷ் ரஜினிக்காக எப்பேர்பட்ட ஸ்கிரிப்ட் யோசித்து வைத்திருக்கிறார் என்று சூப்பர் ஸ்டாரை போலவே ரசிகர்களும் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

Also Read: வளர்த்து விட்டவர்கள் எல்லாம் கை விரித்த பரிதாபம்.. மொத்த சருக்களுக்கு காரணமாய் அமைந்த ரஜினியின் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்