ரஜினியின் சம்பளத்தை நெருங்கும் LCU லோகேஷ்.. போட்டி போட்டு காசை அள்ளி கொட்டும் தயாரிப்பாளர்கள்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழியில் உள்ள டாப் நடிகர்கள் லோகேஷுக்கு வலை வீசி உள்ளனர். இப்போது விஜய்யின் லியோ படத்தில் முமரமாக வேலை செய்து வருகிறார் லோகேஷ்.

அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2 என லோகேஷ் எல்சியு லைன் அப்பில் நிறைய படங்கள் இருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில வருடங்களாக ரஜினிக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் ஓடவில்லை. இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியான போதே கேலி, கிண்டலுக்கு உள்ளானது.

Also Read: வெறி பிடித்து களத்தில் காத்திருக்கும் ரஜினி.. பின்னணியில் இருக்கும் 3 முக்கிய காரணங்கள்

அதாவது சூப்பர் ஸ்டார் படத்திற்கு எந்த போட்டோ சூட்டும் எடுக்காமல் கூகுளில் இருந்து போட்டோவை திருடி டைட்டிலை அறிவித்ததாக நெல்சனை விமர்சனம் செய்தனர். படம் எப்படி இருக்கிறதோ என்ற கவலையில் ரஜினி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்னும் இரண்டு வருடங்களில் சினிமாவை விட்டு ரஜினி விலக உள்ளார்.

ஆகையால் தன்னுடைய கடைசி படம் தரமான படமாக இருக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார். அப்படி சரித்திரம் பேசும் படியாக படத்தை எடுக்கக் கூடியவர் லோகேஷ் தான் என சூப்பர் ஸ்டார் முடிவு செய்துள்ளார். ரஜினியே வான்ட்டாக லோகேஷ் இடம் தனது படத்தை இயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: நட்புக்காக ரூட்டை மாற்றிய லோகேஷ்.. அடுத்ததாக எடுக்கப் போகும் புது அவதாரம்

இப்போது லோகேஷ், ரஜினி இணையும் படத்தை யார் தயாரிப்பது என தயாரிப்பாளர்களுக்குள் போட்டி நிலவி வருகிறது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் தான் இந்த படத்தை இயக்குவேன் என முந்தி அடித்துக்கொண்டு வருகிறார்கள். லோகேஷ் தற்சமயம் ஒரு படத்திற்கு 25 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்.

இந்த சூழலில் ரஜினி படத்தை இயக்க தயாரிப்பாளர்கள் காசை அள்ளி கொட்டிக் கொடுக்க தயாராக உள்ளனர். ஆகையால் ரஜினியின் கடைசி படத்தை இயக்க லோகேஷுக்கு 60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது ரஜினியின் சம்பளத்தை லோகேஷ் நெருங்கி விட்டார்.

பெரிய உச்ச நட்சத்திரமான நடிகருக்கு இணையாக அந்த படத்தின் இயக்குனர் சம்பளம் வாங்குவது சாதாரண விஷயம் கிடையாது. ஆனாலும் லோகேஷுக்கு எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் அதற்கு பதிலாக பல மடங்கு லாபத்தை திருப்பிக் கொடுப்பார் என்பதில் தயாரிப்பாளர்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளனர்.

Also Read: எண்டு கார்டு போடறதுக்குள்ள ஒரு பிரம்மாண்ட வெற்றி கன்பார்ம் .. ரஜினி போடும் பலே திட்டம்