லோகேஷ் அசுர வளர்ச்சிக்கு இவர்தான் காரணம்.. அவங்க இல்லனா மாநகரம் படத்தோட கேரியர் க்ளோஸ் ஆயிருக்கும்

லோகேஷ் கனகராஜ் இப்பொழுது தென்னிந்திய சினிமாவின் ஒரு வெற்றி இயக்குனர் ஆகிவிட்டார்.  இதற்கு காரணம் மிகப்பெரிய முன்னணி நடிகர்களை வைத்து அதிக அளவில் ஹிட்டான படத்தை கொடுத்தது தான். அதிலும் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பெருமை இவரை சேரும்.

ஆனால் இவர் சினிமாவிற்கு நுழைந்த ஆரம்ப கட்டத்தில் குடும்ப கஷ்டத்தை  அதிக அளவில் சந்தித்து இருக்கிறார்.  இவர் இயக்கிய முதல் படமான மாநகரம் வெற்றி பெற்றாலும் அதில் அதிக பணம் வரவில்லை. இதனால்  இவரது இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று அதிகமான பயத்தில் இருந்திருக்கிறார்.

Also read: செம மாஸாக லியோ உடன் போஸ் கொடுத்த லோகேஷ்.. இணையத்தில் காட்டு தீயாக பரவும் புகைப்படம்

அதனால் குடும்ப பிரச்சினை சமாளிப்பதற்காக வேலைக்கு போகலாம் என்று யோசித்து இருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் வேலைக்கு சென்றால் சினிமா நம்மளை விட்டு போய்விடும் என்ற பயமும் இவருக்கு அதிகமாக இருந்துள்ளது. இதனால் மிகப்பெரிய குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த சூழ்நிலையில் தான் இவரது மனைவி பக்கத்துணையாக இருந்து நீங்கள் எதைப் பற்றியும் பயப்பட வேண்டாம்.

உங்கள் கவனம் சினிமாவில் மட்டும் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் குடும்ப கஷ்டத்தை சமாளிப்பதற்கு நான் வேலைக்கு செல்கிறேன் என்று வங்கியில் வேலைக்கு சென்று இருந்திருக்கிறார். இதனை அடுத்து லோகேஷ்க்கு சினிமா மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் இவரது மனைவிக்கு கிடைக்கும் வருமானம் என்று மொத்த வருமானம் சுமார் 60,000 இருக்கும்.

Also read: தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்கும் லோகேஷ்.. 1008 வேலை இருக்கும்போது இது தேவையா!

இந்த வருமானத்தை வைத்து இவர்களது இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு குடும்பத்தையும் நடத்தி இருக்கிறார் லோகேஷ். பின்னர் இவர் இரண்டாவது படமான கைதி படம் உறுதியான பிறகு இவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மனைவியிடம் வேலைக்கு போக வேண்டாம் வீட்டில் இருந்து குடும்பத்தை பார்க்க சொல்லி இருக்கிறார்.

அந்த நேரத்தில் மனைவி மட்டும் உதவவில்லை என்றால் நான் வேறு வேலைக்கு சென்று இருப்பேன். அதனால் எனக்கு சினிமா வெறும் கனவாக போயிருக்கும் என்று மனைவியை பற்றி மிக பெருமிதமாக பேசியிருக்கிறார். பொதுவாக எல்லாரும் சொல்வாங்க கணவன் வெற்றிக்கு பின்னால் கண்டிப்பாக மனைவி இருப்பார்கள் என்று அது இவர்கள் விஷயத்தில் பெரிய உண்மையாகி விட்டது.

Also read: அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய 9 பான் இந்தியா படங்கள்.. லியோ உடன் போட்டி போடும் சூர்யா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்