பூஜை போடல ஆனா அப்டேட் கொடுத்த தலைவர்-171.. என்னதான் அடிபட்டாலும் கெத்து குறையாத லோகி

Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று இருக்கிறது. இதற்கு முக்கியமாக அந்த படத்தின் இரண்டாம் பாதி தான் காரணம். இதுவரை லோகேஷ் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே முதல்முறையாக கலவை விமர்சனத்தை பெற்றது இந்த படம் தான்.

இயக்குனர் லோகேஷ் இந்த விமர்சனங்களை ரொம்பவும் எதார்த்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் தன்னுடைய அடுத்த படத்தின் வேலையில் முழுமையாக இறங்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். மற்ற இயக்குனர்களுக்கு எல்லாம் ஒரு படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றால் ரசிகர்கள் ட்ரோல் செய்வார்கள். ஆனால் லோகேஷ் மட்டுமே ரசிகர்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்.

லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தலைவர் 171 படத்தின் மீது அதிக ஹைப் ஏறிவிட்டது. இதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் மற்றும் லோகேஷ் கூட்டணி தான். தற்போது லியோ ரிலீஸாகி ஒரு வாரம் ஆவதற்குள்ளேயே அந்த படத்தை மறந்து விட்டு, அத்தனை பேரும் லோகேஷின் அடுத்த படத்தின் மீது கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். லோகேஷ் கூட லியோ பிரமோஷன் இன்டர்வியூக்களில் ரஜினி படத்தை பற்றி அதிகம் பேசி இருந்தார்.

தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்புகள் எல்லாமே முழுக்க சென்னையில் தான் நடைபெற இருக்கிறது. இரண்டு எபிசோடுகள் மட்டும் வெளிநாட்டில் எடுக்க பட குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இந்த படத்தில் அதிகமாக விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் தான் பயன்படுத்த இருக்கிறார்களாம். அதே போன்று ஐ மேக்ஸ் கேமராவை தான் உபயோகிக்க இருக்கிறார்களாம்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் என்னும் ஆங்கில படத்தின் தழுவலாக தான் எடுத்திருந்தார். தற்போது தலைவர் 171 படம் ஆங்கில படத்தின் தழுவலாக தான் வர இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஐரிஷ் மேன் என்னும் ஆங்கில படத்தின் இன்ஸ்பிரேஷன் ஆக தான் இந்த படத்தை எடுக்கிறார் லோகேஷ். இதுவும் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்சன் படம் தான்.

தலைவர் 171 படத்தின் ரிலீஸ் தேதியை முன்னரே பிக்ஸ் செய்ய வேண்டாம் என லோகேஷ் தயாரிப்பு நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார். ரிலீஸ் தேதியை குறித்து வைத்துவிட்டு அந்த அழுத்தத்தில் வேலை செய்வது தனக்கு சரிவராது என்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இதனால் அந்த படத்தின் ஒட்டுமொத்த வேலைகளும் முடிந்த பிறகு தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை