மொத்த யூனிட்டையும் குழப்பிய லோகேஷ் கனகராஜ். . பாபநாசம் கமல் போல் செய்த ட்ரிக்ஸ்

Leo Movie Update: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் லியோ திரைப்படம் பரபரப்பாக உருவாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், டெக்னிக்கல் வேலைகள் மட்டுமே மீதம் இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இயக்குனர் லோகேசை பொருத்தவரைக்கும் அவர் கதை சொல்லும் விதத்தை அவ்வளவு எளிதாக யாராலும் கணித்து விட முடியாது. அவருடைய கைதி படமாக இருக்கட்டும், விக்ரம் படமாக இருக்கட்டும் அடுத்தடுத்து என்ன என்று யூகிக்க முடியாமலேயே இருந்தது. தற்போது லியோ திரைப்படமும் அப்படி ஒரு வித்தியாசமான கதை களத்தில் தான் உருவாகி இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Also Read:சிங்கத்தை தாண்டி லியோவில் இடம்பெறும் விலங்கு.. லோகேஷை நம்பி பல கோடி செலவு செய்த லலித்

ஒரு படம் சம்பந்தப்பட்ட கதை அல்லது மற்ற தகவல்கள் வெளியில் தெரிவதற்கு முன்பு அந்த படத்தின் யூனிட்டில் வேலை செய்பவர்களுக்கு தெரிந்து விடும். இதனாலேயே பல படபிடிப்பு தளங்களில் நடக்கும் விஷயங்கள் மற்றும் படத்தின் கதைகள் எளிதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிவிடும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எப்படி படம் எடுப்பதில் வித்தியாசமாக இருக்கிறாரோ அப்படியே இந்த விஷயத்தையும் ரொம்ப வித்தியாசமாக கையாண்டு இருக்கிறார்.

அதாவது படப்பிடிப்பு தளத்தில் அடுத்தடுத்து எடுக்கப்படும் காட்சிகளை வைத்து திரை கதையை ஓரளவுக்கு சொல்லி விட முடியும். ஆனால் லோகேஷ் படத்தின் காட்சிகளை தொடர்ந்து எடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றும் என படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். இதனால் என்ன இவர் சம்பந்தமே இல்லாத காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று மொத்த யூனிட்டும் குழம்பிப் போய் இருக்கிறது. கடைசி வரை அந்த யூனிட்டில் இருந்தவர்களுக்கு லியோ படத்தின் கதை என்னவென்றே தெரியாதாம்.

Also Read:40 வருடங்களாக விஜய்யின் இமேஜை கெடுத்து அசிங்கப்படுத்திய சம்பவங்கள்.. அரசியல் முடிவுக்கு காரணம் இதுதான்

மேலும் தளபதி விஜய் தவிர வேறு யாருக்குமே படத்தின் கதையை லோகேஷ் சொல்லவில்லை என்கிறார்கள். விஜய்யும் அவருடைய சமீபத்திய ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படத்தில் இதுபோன்ற பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் ரொம்பவும் திணறினார் . லோகேஷ் லியோ திரைப்படத்தில் இதை ரொம்பவே எளிமையாக கையாண்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

லோகேஷ் கனகராஜூக்கு ரொம்பவும் பிடித்த உலகநாயகன் கமலஹாசன் பாபநாசம் திரைப்படத்தில் இல்லாத ஒரு நாளை அவரே உருவாக்குவார். அதேபோன்று விவரிப்பது இது லியோ படத்தின் கதையா என்று அனைவரும் திணறும் அளவுக்கு இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார். சினிமாவை சரியாக புரிந்து கொண்டு திறமையாக வேலை செய்து வருகிறார் லோகேஷ்.

Also Read:40 வருட திரையுலக வெற்றிக்கு தளபதி மெயின்டைன் செய்யும் 5 சீக்ரெட்.. இரண்டு தலைமுறையாக கொண்டாடப்படும் ஹீரோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்