ஆண்டவரின் சொந்த வாழ்க்கையை அப்படியே காட்டிய இனிமேல் வீடியோ.. லோகேஷ், ஸ்ருதியின் அல்டிமேட் கெமிஸ்ட்ரி

Lokesh-Shruthi: ஹீரோ அவதாரம் எடுத்துள்ள லோகேஷ், ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி இருந்தது.

18 நொடிகள் மட்டுமே இருந்த அந்த வீடியோவில் லோகேஷ் ரொமான்டிக் பாயாக ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதையடுத்து முழு வீடியோவும் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அதன்படி இன்று மாலை 4 மணிக்கு அந்த பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது பாடல் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

ஸ்ருதி லோகேஷின் கெமிஸ்ட்ரி

ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த பாடலை கமல் எழுதியிருக்கிறார். ஸ்ருதிஹாசன் குரலில் வெளியாகி உள்ள இப்பாடல் ரசிகர்களை ஏமாற்றாத வண்ணம் இருக்கிறது.

அதிலும் லோகேஷின் நடிப்பும் எதிர்பாராத சர்ப்ரைஸ் தான். முதலில் காதலிப்பதும் திருமணத்திற்கு பிறகு அந்த காதல் காணாமல் போவதும் தான் இதன் மையக்கரு.

கிட்டத்தட்ட கமல் வாழ்க்கையை போல் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதில் லோகேஷ் ஸ்ருதி இருவரும் சிறப்பாக நடித்து கொடுத்துள்ளனர். இதன்பிறகு லோகேஷுக்கு ஹீரோ வாய்ப்பு குவிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்