ஆரம்ப காலத்தில் தற்கொலைக்கு முயன்ற லிவிங்ஸ்டன்.. காரணத்தைக் கேட்டு கைப்பிடித்து தூக்கிவிட பிரபலம்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகர்களும் லிவிங்ஸ்டன் ஒருவர் ஆனால் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்ய முயன்று உள்ளார். பின்பு லிவிங்ஸ்டன் காரணத்தை கேட்டு மற்றொரு பிரபலம் உதவி செய்ததன் மூலம் மீண்டும் தனது வாழ்க்கையை தொடங்கி உள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய லிவிங்ஸ்டன். அதன்பிறகு பன்முகத் திறமைகள் கொண்ட லிவிங்ஸ்டன் ஸ்கிரீன் ரைடர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் பணியாற்றியுள்ளார்.

கன்னி ராசி, காக்கி சட்டை மற்றும் அறுவடை நாள் ஆகிய படங்களில் ஸ்கிரீன் ரைட்டர்ராகவும், சூரியன் படத்தில் நடித்த பாபு ஆண்டனிக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ராகவும் பணியாற்றியுள்ளார்.

சினிமாவில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு காமெடி, ஹீரோ மற்றும் வில்லன் என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பல சீரியல்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

bhagyaraj
bhagyaraj

சினிமாவில் வெற்றி கண்ட லிவிங்ஸ்டன் ஒருகாலத்தில் சினிமாவில் வாய்ப்பு வராததால் தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். பின்பு பாக்யராஜிடம் போய் சென்று தனது நிலைமை பற்றி கூறியுள்ளார். அதன்பிறகுதான் பாக்யராஜ் தனது படங்களிலும், படத்திலும் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அதன்பிறகுதான் லிவிங்ஸ்டன் வாழ்க்கையை மாறியதாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அதன் பிறகு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தற்போது வரை பல படங்களில் சிறப்பாக நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -