திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விஜய், அஜித் இல்லாத சிறந்த 10 நடிகர்களின் லிஸ்ட்.. வசூல் பண்ணா மட்டும் பத்தாது, பெர்பார்மன்ஸ் இல்ல

கோலிவுட்டில் கடந்த வருடம் வெளிவந்த ஒரு சில படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் படங்களில் வரும் அழுத்தமான கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதிலும் இவர்களின் கதாபாத்திரம் அவர்கள் நடித்த படத்திற்கே, மாபெரும் வெற்றியை தேடி தந்ததோடு மட்டுமல்லாமல் வசூல்  ரீதியாகவும் சாதனை படைத்தது. அப்படியாக வசூல் பண்ணா மட்டும் போதாது என்று தங்களின் பெர்பார்மன்ஸில் தெறிக்க விட்ட 10 சிறந்த நடிகர்களை இங்கு பார்க்கலாம்.

கடந்த வருடம் ஜூன் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாசாக வெளிவந்த திரைப்படம் விக்ரம். இதில் கமலஹாசனின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: அடுத்து ஆஸ்கர் கதவை தட்டப்போகும் படம்.. உலகநாயகன் செய்யப்போகும் வரலாறு

அதிலும் வரலாற்று காவியமான மணிரத்தினம் படத்தில் வந்தியதேவன் ஆக தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருப்பார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் படத்தில் வரும் அகநக பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு அடுத்து சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தனித்தது காடு திரைப்படம் கேங்ஸ்டர் கதை அம்சத்தில் வெளிவந்தது.  

இப்படத்தில் சிம்பு முத்துவீரன் என்னும் அழுத்தமான கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி நடித்திருந்தார். அடுத்ததாக மாதவன் நடிப்பில் உருவான  திரைப்படம் ராக்கெட்ரி நம்பி விளைவு. இதில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் விஞ்ஞானி ஆன, நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் தனது எதார்த்தமான நடிப்பை  வெளிக்காட்டி இருப்பார்.

Also Read: பக்கா மெலடி சாங்.. வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் அக நக பாடல் க்ளிம்ப்ஸ்

இதனைத் தொடர்ந்து பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்த நடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தார். அடுத்ததாக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் டானாகாரன். இதில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் காவல்துறை பயிற்சி முகாமில் நடக்கும் தில்லுமுல்லு வேலைகளை கண்டுபிடிக்கும் போல்டான கதாபாத்திரத்தில் தனது எதார்த்தமான நடிப்பை காட்டியிருப்பார்.

இந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி, அசோக் செல்வன் நடிப்பில் நித்தம் ஒரு வானம் சில நேரங்களில் சில மனிதர்கள், தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், கருணாஸ் நடிப்பில் ஆதார் போன்ற படங்களில் இவர்கள் தங்களது அபார மற்றும் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகர்களாக நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

Also Read: அடுத்தடுத்து வெளிவர உள்ள விக்ரமின் 5 படங்கள்.. உயிரைக் கொடுத்து போராடும் சியான்

- Advertisement -

Trending News