ஆல் ஸ்டேட்ல அய்யா கில்லி மாதிரி.. அடுத்தடுத்து பட்டையை கிளப்பும் அனிருத்தின் 5 படங்கள்

தனுஷின் 3 படத்தில் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பேமஸான பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத், அதன்பின் டாப் நடிகர்களின் படங்களில் வரிசையாக இசையமைப்பாளராக பணியாற்றி கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறினார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஆல் ஸ்டேட்ல அய்யா கில்லி மாதிரி ரவுண்ட் கட்டுகிறார். அதிலும் இவருடைய இசையில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் 5 தமிழ் படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படங்கள் அனைத்தும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, இந்த படத்தில் இரண்டாம் பாகம் அனிருத் இசையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விக்ரம் படத்தில் கமலுக்கு மாசான பிஜிஎம் போட்டதை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் பட்டைய கிளப்பு போகிறார்.

Also Read: 18 வருடத்திற்கு பின் திரையில் மோதிக் கொள்ளும் ரஜினி, கமல்.. பொன்னியின் செல்வனால் ஏற்பட்ட மோதல்

ஜவான்: அட்லியின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர். பல கியூட்டான நடிகர்கள் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில் அனிருத்தும் க்யூட்டாக இசை போட்டால் அது இன்னும் க்யூட் ஆக இருக்கும்.

ஜெயிலர்: நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே ரஜினியின் பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு இசையமைத்து மிரட்டிய அனிருத் மூன்றாவது முறையாக ரஜினிக்கு ஜெயிலர் படத்தையும் இசையமைக்கிறார். இதனால் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: 85 தியேட்டர் வித்தியாசத்தில் முதலிடத்தில் துணிவா, வாரிசா.? ஆட்டநாயகனை உறுதி செய்த 25வது நாள்

லியோ: விட்டா இப்பவே டிக்கெட் எடுத்து வச்சுருவாங்க போல அந்த அளவுக்கு மக்கள் ஆர்வத்தை தூண்டும் படமாக லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடிக்கின்றனர். கில்லி படத்தின் மூலம் ஏற்கனவே விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்து மாஸ் ஹிட் கொடுத்துள்ளனர். இன்றளவும் அத்திரைப்படம் மக்களிடையே பேசப்பட்டு தான் வருகிறது. கில்லி படத்தின் வைப்ஸ் இன்னும் குறையாத நிலையில் மீண்டும் விஜய்- திரிஷா காம்பினேஷனில் இசையமைப்பாளராக அனிருத் வருவது 90’ஸ் கிட்ஸ்க்கு குச்சி மிட்டாய், குருவி ரொட்டியும் சேர்ந்து சாப்பிட்டது போல் இருக்க போகிறது.

NTR 30: தெலுங்கு ஸ்டார் ஆன ஜூனியர் என்டிஆர் தற்பொழுது தனது 30ஆவது படத்தில் அடி எடுத்து வைத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஜான்வி கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரட்டலா சிவா உடன் என்டிஆர் இணையும் மூன்றாவது படம் இது. இப்படம் 2024 ஏப்ரல் 5 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் அனிருத் தனது கைவண்ணத்தை காட்ட உள்ளார்.

Also Read: தளபதி 67 விஜய்க்கு மட்டும் ஸ்பெஷல் இல்ல, த்ரிஷாவுக்கு அதைவிட ஸ்பெஷலாம்.. செம மேட்டரா இருக்கே!

இவ்வாறு அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல அனிருத் தனது இசை கலையின் மீது கொண்ட ஈர்ப்பால் படிப்படியாய் வளர்ந்து இந்திய சினித்துறையில் தான் பார்க்காத இடமே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறார். சிறு வயதிலேயே இந்த அளவு இசையில் ஈடுபடும் காட்டி பனை மரம் போல் வளர்ந்து ஆலமரம் போல் சினிமாவில் அனிருத் வேரூன்றி விட்டார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை