பூசணிக்காய் உடைத்தும் ரிலீசாகாமல் கிடப்பில் கிடக்கும் 5 படங்கள்.. அரவிந்த் சாமியை பிடித்து ஆட்டும் தலைவலி

வெகு நாட்களாகவே இப்போது ரிலீஸ் ஆகும், அப்போது ரிலீசாகும் என ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் 5 படங்களுக்கு பூசணிக்காய் எல்லாம் உடைத்தும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். அதிலும் ரசிகைகளின் மனதை கவர்ந்த அரவிந்த்சாமி நடித்த கள்ளபார்ட் திரைப்படம் அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

பிசாசு 2: பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பேய்களை கூட தேவதையாக காட்டக்கூடிய மிஷ்கினின் படைப்பை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணா மூர்த்தி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கின்றனர். முழு படமும் தயாராகி உள்ள நிலையில் கடந்த ஆண்டே வெளியாகி இருக்கணும். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை பலமுறை வெளியிட்டும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

Also Read: அரவிந்த் சாமியை பார்த்து ஜொள்ளு விட்ட 5 ஹீரோயினிகள்.. இன்றுவரை க்ரஸ்ஷில் இருக்கும் குஷ்பூ

கள்ளபார்ட்: அரவிந்த்சாமி, ரெஜினா நடித்த கள்ளபார்ட் என்ற திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தும் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதில் அரவிந்த்சாமி பல வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக நடித்திருப்பதால், இந்த படம் ரிலீஸ் ஆனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் சில பிரச்சனைகளால் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் அவருக்கு பெரிய தலைவலியாக மாறியது.

இடம் பொருள் ஏவல்: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா தாஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்த திரைப்படம் இடம் பொருள் ஏவல். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியீட்டிற்கு தயாராக இருந்த இந்த படம் பொருளாதார பிரச்சினையால் நீதிமன்றத்தில் முடங்கியது. அதன் பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இன்னும் படம் வெளியாகாமல் இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தை லிங்குசாமி தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: மணிரத்னம் அறிமுகப்படுத்திய ரத்தினக்கல்.. இளசுகளை கிறங்கடித்த அரவிந்த் சாமியின் 6 வெற்றி படங்கள்

காதல் 2 கல்யாணம்: இந்த படத்தில் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் ரம்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, அதன்பின் 2019 ஆம் ஆண்டு முடிவடைந்தது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது வரை அறிவிக்காமல் படத்தை கிடப்பில் போட்டு இருக்கின்றனர்

பார்ட்டி: வெங்கட் பிரபு இயக்கத்தில் டி. சிவா தயாரித்த இந்த படத்தில் ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்திருந்தார். படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என அறிவித்த நிலையில். இப்போது வரை படத்தை ரிலீஸ் செய்யாமல் கிடப்பில் போட்டு இருக்கின்றனர்.

Also Read: பெண் ரசிகைகளால் அதிகமாக ரசிக்கப்பட்ட 6 நடிகர்கள்.. திருமணத்தால் ஹீரோவிலிருந்து ஜீரோவான பிரஷாந்த்

இவ்வாறு இந்த 5 படங்கள் தான் இன்னும் ரிலீஸ் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டனர். அதிலும் அரவிந்த்சாமி பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் வெளியாகாதது அவருக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்