இயக்குனர் லிங்குசாமிடம் திட்டு வாங்கிய இளம் நடிகை.. கேராவனில் கதறி அழுத சோகம்.

தமிழ் சினிமாவில் சண்டைக்கோழி, பையா, ரன் போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கியவர் இயக்குனர் லிங்குசாமி. முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த லிங்குசாமியின் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த அஞ்சான் மற்றும் சண்டைக்கோழி 2 ஆகிய படங்கள் தோல்வியைச் சந்தித்தன.

இதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக படங்கள் இயக்காமல் இருந்த லிங்குசாமி தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி நடித்த தெலுங்கு படமான உப்பெண்ணா படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இதனையடுத்து தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

krithishetty-cinemapettai
krithishetty-cinemapettai

இந்நிலையில் இப்படத்தின் உணர்ச்சிபூர்வமான காட்சி ஒன்றை படமாக்கும் பொழுது கீர்த்தி ஷெட்டி ஒழுங்காக நடிக்கவில்லையாம். மேலும் பல டேக்குகள் எடுத்தும் அவர் ஒழுங்காக நடிக்காததால் இயக்குனர் லிங்குசாமி அனைவரின் முன்பாகவும் கீர்த்தி ஷெட்டியை கோபமாக திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கீர்த்தி ஷெட்டி அவரின் கேரவனுக்கு அழுதுகொண்டே சென்றுள்ளார். இந்த செய்தி தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. என்னதான் கீர்த்தி ஷெட்டி நடிகையாக நடித்தாலும் அவரது வயது என்னவோ வெறும் 15 வயதுதான். எனவே சற்று பொறுமையாக கூறி இருக்கலாம் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.

- Advertisement -