சிம்புவின் படத்தை பார்த்து புகழ்ந்த லிங்குசாமி.. எத்தனை வருஷம் ஆனாலும் சலிக்காது

குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், சண்டக்கோழி, பையா, அஞ்சான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது லிங்குசாமி தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார்.

அதாவது தெலுங்கில் பிரபல நடிகரான ராம் பொதினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகிவரும் தி வாரியர் படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார்.

தி வாரியர் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ட்ரெண்டாகி உள்ளது. அதிலும் புல்லட் பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தி வாரியர் படம் ஒரு காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லிங்குசாமி ஓய்வெடுக்கும் போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்துள்ளார். இப்படத்தில் எழுத்து, காதல், இசை, பாடல், காட்சி அமைப்பு என அனைத்தும் அற்புதமாக அமைந்திருந்தது.

தற்போது தான் இயக்கும் தி வாரியர் படத்தை புதுப்பித்துக்கொள்ள விண்ணைத்தாண்டி வருவாயா படம் எனக்கு உதவியது. இத்தனை வருடங்களுக்கு பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் எழுத்து, இசை, பாடல், காட்சி அனைத்திலும் ஒரு மேஜிக்கை உருவாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காதல் படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் இடம்பெறும் எனக் லிங்குசாமி கூறியுள்ளார். சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பற்றி லிங்குசாமி இவ்வாறு புகழ்ந்து பேசியது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.