சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தோல்வியினால் துவண்டு போன லிங்குசாமி.. மேடையிலேயே கண்ணீர்விட்டு கதறிய பரிதாபம்

தமிழ் சினிமாவில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி அதை தொடர்ந்து ரன், சண்டைக்கோழி போன்ற பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பையா, வேட்டை, அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தயாரித்திருக்கிறார்.

இவர் கடைசியாக தமிழில் சண்டைக்கோழி 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தி வாரியர் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ராம் போத்தினேனி, ஆதி, கீர்த்தி செட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் சங்கர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது மேடையில் பேசிய இயக்குனர் லிங்குசாமி தன் வாழ்க்கையில் தான் கடந்து வந்த தோல்விகள் பற்றி மிகவும் உருக்கமாக பேசி கண்ணீர் விட்டார். அவர் கூறியிருப்பதாவது, திரையுலகில் எனக்கு பல தோல்விகள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் என்னை சுற்றி பல நல்ல மனிதர்கள் இருப்பதால் நான் அதிலிருந்து மீண்டு வருகின்றேன்.

இந்த விழாவிற்கு நான் மணிரத்னம் சாரை அழைத்திருந்தேன். அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிகவும் பிசியாக இருக்கிறார். இருப்பினும் எனக்காக இந்த விழாவில் அவர் கலந்து கொள்ள சம்மதித்தார். அதேபோன்றுதான் சங்கர் மற்றும் பாரதிராஜா இருவரும் என் மீது கொண்ட அன்பினால் அவர்களுடைய பிசியான வேலைகளுக்கு நடுவிலும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

எனக்கு வீடு, ஆபிஸ், கார் போன்று எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்காக இருக்கும் மனிதர்கள் என் வாழ்க்கை முழுவதிலும் இருப்பார்கள். அதுதான் என் வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றி என்று அவர் மிகவும் உருக்கமாக பேசினார்.

அவருடைய இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் அவருக்கு நிச்சயம் ஒரு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News