ஹீரோனா 50 லட்சம், வில்லனா 4 கோடி வரை சம்பளம்.. எப்படி வசதி என இளம் நடிகரை கேட்ட லிங்குசாமி!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இறுதியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த சண்டைக்கோழி 2 படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

எனவே தற்போது இவர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் பொத்தினேனி நாயகனாகவும், சமீபத்தில் வெளியான உப்பென்னா படம் மூலம் பிரபலமான நடிகை க்ரீதி ஷெட்டி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் மாதவனிடம் லிங்குசாமி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டதால் இந்த வாய்ப்பு நடிகர் ஆதிக்கு சென்றுள்ளது.

தமிழில் மிருகம், ஈரம், யாகவராயினும் நாகாக்க உள்ளிட்டப் படங்களில் ஆதி நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆதிக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதி ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படும் நிலையில், வில்லனாக நடிக்கும் படத்திற்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

aadhi-actor
aadhi-actor

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -