ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சமந்தா, நயன்தாரா போல ஐட்டம் நடிகை என பெயர் வாங்காத மூன்றெழுத்து நடிகை .. 20 ஆண்டுகளில் ஒரு பாட்டு கூட இல்லையாம்

ஒரு படத்தில் கதை உள்ளதோ, இல்லையோ கட்டாயம் ஐட்டம் டான்ஸ் இருந்தால் இளசுகள் முதல் பெருசுகள் வரை திரையரங்குகளில் ஐட்டம் டான்ஸ் ஆடும் நடிகைகளை பார்க்க படையெடுத்துச் செல்வர். அப்படி 60 முதல் 80 காலகட்டங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு என தனி நடிகைகள் இருப்பர். அவர்களை ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கும், படங்களில் சில காட்சிகளில் கவர்ச்சிக்காகவும், இயக்குனர்கள் அவர்களை நடிக்க வைப்பர்.

இதன் காரணமாக மற்ற நடிகைகளை காட்டிலும் ஐட்டம் டான்ஸ் ஆடும் நடிகைகளுக்கு சம்பள உயர்வு, ரசிகர்கள் பலம் என அனைத்தும் இவர்களுக்கென தனி பாணியாக தமிழ் சினிமாவில் உருவாகிக்கொண்டிருந்தது. அப்படி ஐட்டம் டான்ஸ் மூலமாக ரசிகர்களை கவர்ந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் மறைவுக்கு பின்னர், தமிழ் சினிமாவில் ஐட்டம் டான்ஸ் ஆடும் நடிகைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது.

Also Read: நயன்தாராவுக்காக பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய்சேதுபதி.. பழக்கத்திற்காகவே இறங்கி செய்யும் காரியம்

இதனால் படத்தில் நடிக்கும் நடிகைகளே ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்து வந்தனர். ஆனால் இந்த ஐட்டம் டான்ஸ் ஆடும் நடிகைகள் சிலர் ஐட்டம் நடிகை என பெயர் வாங்கி தொடர் பட வாய்ப்புகள் இல்லாமல் செல்வர். சிலருக்கோ வாய்ப்புகள் கூரையை பிச்சிகிட்டு கொட்டும். அப்படி ஐட்டம் டான்ஸ் ஆடியும் ,ஐட்டம் நடிகைகள் என பெயர் வாங்காத நடிகைகள் தான் நயன்தாரா மற்றும் சமந்தா.

நடிகை நயன்தாரா, சிவாஜி திரைப்படத்தில் இடம்பெற்ற காவேரி ஆறும் என்ற பாடலுக்கு ரஜினியுடன் இணைந்து அந்த ஒரு படடலில் கவர்ச்சியாக ஆடினார். அதன் பின்னர் சில வருடங்கள் கழித்து தனுஷின் வேண்டுகோளுக்கு இணங்க தனுஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி தனது மார்க்கெட்டை பிடித்தார்.

Also Read: மார்க்கெட்டுக்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் மார்க்கெட்ட எகிற வச்ச ஊ சொல்றியா மாமா

அதே போல நடிகை சமந்தாவும் திருமணமான பின் கவர்ச்சிக் காட்டாமல் சில படங்களில் நடித்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து தனது மொத்த கவர்ச்சியையும் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி தனது மார்க்கெட்டை இந்திய அளவில் பிடித்துள்ளார். இப்படி இவர்கள் இருவரும் ஐட்டம் டான்ஸ் ஆடியும் ரசிகர்கள் மத்தியில் ஐட்டம் நடிகைகள் என்ற பெயரை இன்றளவும் வாங்கியது இல்லை.

இவர்களை போலவே 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷாவும் இதுவரை ஐட்டம் நடிகை என்ற பெயரை வாங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு படத்தில் கூட தனியாக ஒரு பாடலுக்காக சென்று ஐட்டம் டான்ஸ் ஆடாமல் உள்ளார் த்ரிஷா. தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள த்ரிஷா தான் நடிக்கும் படங்களில் மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:தளபதி 67 முழு கதையைக் கேட்டவுடன் விலகுகிறாரா த்ரிஷா.? தூக்கி வாரி போட்ட சம்பவம்

- Advertisement -

Trending News